Virat Kholi : விராட் கோலி செய்யப்போகும் அடுத்த சாதனை... பயத்தில் சங்ககரா

Virat Kholi | இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைக்கபகிறோர். இதனால் இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சங்ககரா பயத்தில் இருக்கிறார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2025, 04:53 PM IST
  • விராட் கோலியின் அடுத்த சாதனை
  • பயத்தில் இருக்கும் குமார் சங்ககரா
  • சச்சின் சாதனையை நெருங்கப்போகிறார்
Virat Kholi : விராட் கோலி செய்யப்போகும் அடுத்த சாதனை... பயத்தில் சங்ககரா title=

Virat Kholi Records | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார். எதிர் வரப்போகும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார். அந்த சாதனையை படைக்க விராட் கோலிக்கு இன்னும் 329 ரன்கள் மட்டுமே தேவை. இதனால் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் குமார் சங்ககரா மிகப்பெரிய பயத்தில் இருக்கிறார். ஏனென்றால் அவர் வசம் இருக்கும் சாதனையை தாம் விராட் கோலி தகர்க்க உள்ளார். அது என்ன சாதனை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 முதல் நடக்க உள்ளது. இப்போது இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. இந்த தொடர் முடிந்ததும் ஒருநாள் போட்டி நடக்கிறது. அதில் சங்ககராவின் சாதனையை விராட் கோலி தகர்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி நாக்பூரில் நடைபெறும். 2வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்.

சங்கக்காரவின் சாதனைக்கு ஆபத்து

இந்த ஒருநாள் தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 329 ரன்கள் எடுத்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக மாறுவார். இதன்மூலம் இப்போது இந்த சாதனையை தன் பெயரில் வைத்திருக்கும் குமார் சங்கக்காரவின் பெயர் இப்போது இருக்கும் சாதனைப் பட்டியலில் இருந்து ஒரு படி கீழிறங்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் குமார் சங்கக்காரா தற்போது 14,234 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி ரெக்கார்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 13,906 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். இரண்டாவது இடத்தில் 14,234 ரன்கள் எடுத்து குமார் சங்ககரா இருக்கிறார். இப்போது இந்த இடத்தை தான் விராட் கோலி குறி வைத்திருக்கிறார். வெறும் 329 ரன்கள்எடுத்தால் சங்ககரா இடத்தை விராட் கோலி தாண்டிவிட முடியும். அப்போது, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இரு இடங்களிலும் ச ச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என இரு இந்திய கிரிக்கெட்டர்களின் பெயர்கள் மட்டுமே இருக்கும்.

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்

1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 18,426 ரன்கள்

2. குமார் சங்கக்கார (இலங்கை) - 14,234 ரன்கள்

3. விராட் கோலி (இந்தியா) - 13,906 ரன்கள்

4. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 13,704 ரன்கள்

5. சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 13,430 ரன்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்

1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 34357 ரன்கள்

2. குமார் சங்கக்கார (இலங்கை) - 28016 ரன்கள்

3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 27483 ரன்கள்

4. விராட் கோலி (இந்தியா) - 27324 ரன்கள்

5. மஹேல ஜெயவர்தனே (இலங்கை) - 25957 ரன்கள்

6. ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 25534 ரன்கள்

7. ராகுல் டிராவிட் (இந்தியா) - 24208 ரன்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள்

1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 100 சதங்கள்

2. விராட் கோலி (இந்தியா) - 81 சதங்கள்

3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 71 சதங்கள்

4. குமார் சங்கக்கார (இலங்கை) - 63 சதங்கள்

5. ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 62 சதங்கள்

6. ஹாஷிம் ஆம்லா (தென்னாப்பிரிக்கா) - 55 சதங்கள்

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள்

1. விராட் கோலி (இந்தியா) - 50 சதங்கள்

2. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 49 சதங்கள்

3. ரோஹித் சர்மா (இந்தியா) - 31 சதங்கள்

4. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 30 சதங்கள்

5. சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 28 சதங்கள்

மேலும் படிக்க | ரஞ்சி விளையாட தயாராகும் விராட் கோலி.. வீடியோ வைரல்!

மேலும் படிக்க | 'இது ரொம்ப நல்லது...' தமிழக அரசுக்கு ஆதவ் அர்ஜுனா நன்றி - என்ன விஷயம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News