காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் பகுதியில் சாம்சங் தனியார் ஆலை செயல்படுகிறது. அங்கு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில், இவர்கள் ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டமானது 30 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தை முடிக்கு கொண்டு வர தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், தொடர்ந்து போராட்டம் நடத்தி உடன்பாடு ஏற்பட்ட பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும் படிங்க: மருதமலை திரைப்பட பாணியில் சம்பவம் செய்த பெண்.. திடுக்கிடும் புகார்கள்!
இதையடுத்து அக்டோபர் மாதம் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு திரும்பினர். மேலும், தொழிற்சங்கத்தை ஆலையில் அங்கீகரித்து பதிவு செய்யாதது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தொழிற்சங்க பதிவு தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க 6 வார கால அவகாசம் கொடுத்திருந்தது. இன்றுடன் (ஜன.27) 6 வார அவகசாம் முடிவடைகிறது. இந்த நிலையில், சாம்சங் இந்திய தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை இன்று (ஜன.27) அறிவித்துள்ளது.
மேலும் படிங்க: சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: "என் கல்யாணமே நின்றுவிட்டது".. கதறும் நபர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ