தேமுதிக துவங்கி இன்றோடு 12 ஆண்டுகள் முடிவடைந்து 13வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
இதனையடுத்து தேமுதிக கழக தொண்டர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளதாவது
இன்று (செப் 14) தேமுதிக 13வது ஆண்டு துவக்க விழாவில், நம் கழகக் கொடியை ஏற்றிவைத்த மகிழ்ச்சியான நிகழ்வு... pic.twitter.com/YiCkgRMrEK
— Vijayakant (@iVijayakant) September 14, 2017
குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவின் 14_வது குடியரசு தலைவராக 2017 தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை சந்தித்த திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஜனநாயகத்தை நல்வழியில் கொண்டு செல்ல என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காத தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கடந்த 2012ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு 65 சதவிதமும், மாநில அரசு 35 சதவிகிதமும் ஊதியம் வழங்கவேண்டும்.
ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரும் 20-ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைக்குறித்து தேமுதிக கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
ஜிசாட் 19 அதிக எடை கொண்ட செயற்கைகோளை GSLV MK III ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய @ISRO விஞ்ஞானிகளுக்கும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
பால் கெட்டுப்போகாமல் இருக்க தனியார் நிறுவனத்தினர் ரசாயன பொருட்களை சேர்ப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார்.
இதைக்குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிடப்பட்ட அறிக்கை கூறியதாவது:-
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், அதை ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்களை த்தூ என்று துப்பிய விவகாரம் தொடர்பாக டெல்லி இந்தியன் பிரஸ் கவுன்சிலிடம் விஜயகாந்த் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை த்தூ என துப்பினார். இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜயகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டதுடன், இந்திய பிரஸ் கவுன்சிலில் வழக்கும் தொடரப்பட்டது.
மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய விஜயகாந்த், இன்று ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்கிறார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ப.மதிவாணனை ஆதரித்து 9-ம் தேதி(ஞாயிற்றுகிழமை) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்காளப் பெருமக்களை சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று 38, 39, 40, 41, 42, 43, 47 ஆகிய வட்டங்களில் வீதி, வீதியாக கழக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது தவறு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்தது.
ஜல்லிக்கட்டு போராட் டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் போராட்டத்தில் பின்லேடன் படம் வைக்கப்படவில்லை.
இன்று தனது வீட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமது 65-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
விஜயகாந்துக்கு மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்கள். மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் குடும்பத்தினர் விஜயகாந்துக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீதான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செங்கோட்டில் மதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய மதிமுக நிர்வாகி மனோகர் “ மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்தை தலைவர் போல் சித்தரித்ததும், அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததும் மதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது” என்று கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.