தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரமேலதாவுக்கு திருப்பூர் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2015-ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவைக் குறித்து அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 2 பேரும் நான்கு முறையும் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் நீதிபதி அலமேலு உத்தரவிட்டுள்ளார்.