தேமுதிக கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜூன் 20-ம் தேதி

Last Updated : Jun 18, 2017, 09:53 AM IST
தேமுதிக கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜூன் 20-ம் தேதி title=

சென்னையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரும் 20-ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைக்குறித்து தேமுதிக கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 

புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர். 

வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதேபோல் இந்த ஆண்டும் சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் 20-ம் தேதி(செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கலந்துகொள்கிறார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News