இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
ஜிசாட் 19 அதிக எடை கொண்ட செயற்கைகோளை GSLV MK III ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய @ISRO விஞ்ஞானிகளுக்கும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நேற்று மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.இது 3,136 கிலோ எடை கொண்டது. இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோள் ஆகும்.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோவின் கனவும் விரைவில் சாத்தியமாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.