காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்டு உத்தரவை அடுத்து பெங்களூருவில் வன்முறை வெடித்தது. கன்னட ஆதரவு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
சம்பா சாகுபடிக்கு 10 நாட்களில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, கடந்த மாதம் ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அது தொடர்பான ஆவணங்களை செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது. அந்த ஆவணங்களில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கர்நாடகாவுக்கு எதிராக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தமிழக கவர்னராக இருந்த ரோசைய்யாவின் பதவி காலம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. அவருக்கு பதில் புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் தொழில் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார் செல்வி ஜெயலலிதா.
அப்போது அவர் கூறியதாவது:- அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள் தான். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள் தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டதில் தமிழகத்திற்கு முக்கிய பங்குண்டு என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தலைமை செயலக கோட்டை முகப்பில் நடந்த 70-வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதற்கு முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்திய பிரதமர் மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் புதின், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் முண்ணனியில் கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர், ரஷ்யாவுடன் இணைந்து மேலும் பல அணு உலைகளை கூடங்குளத்தில் தொடர்ந்து செயல்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் இன்று, அதிமுக - திமுக எம்.பி.,க்கள் மோதல் தொடர்பான விவகாரம் குறித்து எழுப்பப்பட்டது. இப்போது பேசிய அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா தனக்கு டில்லியில் பாதுகாப்பில்லை என தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. இதில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் நரசிம்மன், “முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசி னார்.இதற்கு தி.மு.க. உறுப் பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே சபாநாயகர் குறுக்கிட்டு: தி.மு.க. உறுப்\பினரின் பெயரை மாண்புமிகு கருணாநிதி என்று மரியாதையுடன்தான் குறிப்பிட்டார். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.
உடனே துரைமுருகன் எழுந்து: முதல்-அமைச்சர் பெயரை நாங்கள் குறிப்பிட்டு பேசலாமா? என்றார்.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016- 2017-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியது. காலை 11 மணியளவில் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில், நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
கடலில் மீன்பிடிக்கும் போது, உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு முதலவர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். 11 மீனவர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த மார்ச் 3-ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம், சுந்தரமுடையான் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் அழகர்,
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களில் வேகமாகச் சென்று கண்காணிப்பதைவிட, சைக்கிள்களில் மெதுவாகச்செல்லும் போதுதான் இரவில் அக்கம் பக்கத்தை நன்றாகக் கண்காணித்தபடி செல்ல முடியும். இந்த கருத்தின் அடிப்படையில்தான் முந்தைய காலகட்டங்களில் போலீசாருக்கு இரவு ரோந்துப் பணிக்கு சைக்கிள் வழங்கப்பட்டு இருந்தது.அதை பின்பற்றும் வகையில், சென்னை போலீசாருக்கு ரோந்துப் பணிக்காக 250 சைக்கிள்களை கோட்டையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உட்பட 11,967 பேர் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களை வரவேற்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார்:-
ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக் கொண்டு கச்சத்தீவு விவகாரத்தில் என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கச்சத்தீவு பற்றி தமிழக சட்டப் பேரவையில் நேற்றைய தினம் பிரச்சினை ஏற்பட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத்தீவு பற்றிப் பேச திமுக -வுக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.