போலீசாருக்கு மைக் வசதிகளுடன் ரோந்து சைக்கிள்கள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

Last Updated : Jun 30, 2016, 01:34 PM IST
போலீசாருக்கு மைக் வசதிகளுடன் ரோந்து சைக்கிள்கள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். title=

வாகனங்களில் வேகமாகச் சென்று கண்காணிப்பதைவிட, சைக்கிள்களில் மெதுவாகச்செல்லும் போதுதான் இரவில் அக்கம் பக்கத்தை நன்றாகக் கண்காணித்தபடி செல்ல முடியும். இந்த கருத்தின் அடிப்படையில்தான் முந்தைய காலகட்டங்களில் போலீசாருக்கு இரவு ரோந்துப் பணிக்கு சைக்கிள் வழங்கப்பட்டு இருந்தது.அதை பின்பற்றும் வகையில், சென்னை போலீசாருக்கு ரோந்துப் பணிக்காக 250 சைக்கிள்களை கோட்டையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். 

இந்த சைக்கிள்களில் பாதசாரிகளை எச்சரிக்கும் வகையில் மைக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், போலீசாரின் பணியை விரைவுபடுத்தும் வகையில், 100 மோட்டார் சைக்கிள்களையும், 100 மின்னணு நவீன கருவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.  இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் சைக்கிள்களில் ரோந்து செல்ல உள்ளனர்.

Trending News