அப்பல்லோவில் சிசியூவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அ.தி.மு.க. தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். முதல் அமைச்சர் ஜெயலலிதா நலமுடன் நல்ல முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறார். விரைவில் அவர் குணமடைந்து பூரண நலத்துடன் வீட்டுக்கு திரும்புவார் என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜெயலலிதா பூரண நலமடைந்துவிட்டதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வருகிறார் மற்றும் விரைவிலேயே வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 44 ஆண்டுகள் முடிவடைந்து. அதிமுகவின் 45 வது ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
தமிழகத்திற்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவை கடந்த மாதம் 2-ம் தேதி மத்திய அரசு நியமனம் செய்தது. இதையடுத்து அவர் தமிழக பொறுப்பு கவர்னராக பதவி ஏற்றார். இந்நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் முதல் - அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இன்று சென்னை வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்வதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்ய அவரை சுற்றியுள்ளவர்கள் சதி செய்து வருவதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க ராகுல் காந்தி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார்.
சென்னை வந்த ராகுல் காந்தி மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். முதல்வருக்கு அளிக்கபடும் சிகிச்சை குறித்த தகவல்களை கேட்டறிந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்றார்.
அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டிள்ளது. அதில் ஜெயலலிதா-வுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார். கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் அவ்வப்போது ஜெயலலிதா-வுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன என அப்பல்லோ வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
- கடந்த 22-ம் தேதி தமிழக முதல் - அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலம் குறித்து அடிக்கடி பல வதந்திகள் வருகின்றன.
வெங்கடேச பண்ணையாரின் 13-வது நினைவு நாளை முன்னிட்டு சசிகலா புஷ்பா அவர்க்கு அஞ்சலி செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சொன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆனால் அவருக்கு பின்னால் இருக்கும் இன்னொருத்துற்காக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.
ஜெயலலிதா பூரண நலம்; வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவமனை கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகள் சில பேர் பரவி வருகின்றன.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 22-ம் தேதி இரவு உடல் நலக் குறைவால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குணம் அடைந்தது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பி அரசு பணிகளை கவனித்து வருகிறார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் வார்டில் உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு உதவியாக சசிகலா, இளவரசி ஆகியோர் உள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் திரண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் திரண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 200 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை, 11:00 மணிக்கு, தலைமைச் செயலக வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 197 புதிய அரசு பஸ்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, 11:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் - சின்னமலை இடையிலான, மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார்.
சென்னையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.