கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 140 இடங்களில் 91 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடதுசாரி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் "பினராயி விஜயன்" தேர்ந்து எடுக்கப் பட்டார். அவருடன் 18 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.
தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவை முடித்து கொண்டு தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஜெயலலிதா. 5 முக்கிய கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
அதைபற்றிய அரசு வெளியிட்ட செய்தி விவரங்கள்:
இன்று 6-வது முறையாகவும் மற்றும் தொடர்ந்து 2வது முறையாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்க உள்ளார். மேலும் அவருடன் 28 பேர் அமைச்சர்களும் பதவியேற்கா உள்ளனர். இவர்களுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்கள் பதவிப் பிரமாணமும் மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழா பகல் 12 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றியை மனசாரக் கொண்டாடுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஃபெப்சி அறிவித்துள்ளது.
ஃபெப்சியின் டிவிட்டர் பக்கத்தில்
ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக வரும் 23-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு 2 தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளுக்கு மே16-ந் தேதி தேர்தல் நடந்தது. 232 தொகுதிகளிலும் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. மழையினால் வாக்கு சதவித சற்று குறைந்துவிட்டது. மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 98 இடங்கள் வென்ற தி.மு.க. எதிர் கட்சியாக செயல்படும்.
தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 174 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகளின் 7 வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதால் தொண்டர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். மேலும் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு விழாக்கோலம் பூண்டுள்ளது.
அடுத்த முதல்வர் "எங்கள் அம்மா" தான் என்று தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகி்ன்றனர்.
இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிகின்றன தொண்டர்கள்.
தமிழக தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைத்துகொள்ளும் என உறுதியான தகவல்கள் வருகின்றன.
செல்வி ஜெயலலிதா பேட்டி பற்றி:-
>வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அதிமுகவுக்கு மக்கள் அளித்துள்ளனர்.
>தமிழக மக்களின் மீது நான் அளவற்ற நம்பிக்கை வைத்து உள்ளேன்.
>மக்கள் குரலே மகேசன் குரல்... தமிழக மக்கள் என்னை கைவிடவில்லை.
>தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல தமிழ் அகராதியில் வாரத்தையே இல்லை.
> என்னுடைய வாழ்வு முழுவதும் தமிழக மக்களுக்கு அற்பணிக்கப்பட்டது.
திருவாரூர் தொகுதியில் போட்டிட்ட திமுக முதலைமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 68,366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,21,473 ஆகும்.
இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 53,107 வாக்குகள் பெற்றுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
திமுகவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தல் தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது.
தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும். அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகளும், தமிழகத்தில் 232 தொகுதிகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. அதேபோல தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தாக்குதல்.
திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் "மக்களின் செழிப்புக்கு எதிரான வாக்கு" எனவும் கூறினார்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மாநில நதிநீர் பிரச்சினை மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் எந்தவித முன்னேற்றம் திமுக செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.