தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூல்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.
சென்னை: கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து வந்தார். அவர் சென்னை வந்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னைவராமல், நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்றார்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரப்பரப்பான பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்திருந்தார்.
அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது அதனால் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தது செல்லாது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தால்மட்டுமே ஒருவர் பொதுச்செயலராக முடியும்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரப்பரப்பான பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்திருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை எப்போதும் வரவேற்பதாகவும், வீதி வீதியாகச் சென்று மக்களின் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுக.,வில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைத்த முதல்வரையே மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் என்றால் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக தலைவர்களம், தொண்டர்களும் குவிந்து வருவதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் தான் மருத்துவமனை சென்ற போதும் ஒரு முறை கூட அவரை சந்திக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெ., சமாதிக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் சுமார் 40 நிமிடங்கள் கண்களை மூடி, மவுனமாக தியானத்தில் ஈடுபட்டார். இரவு 9.40 மணி அளவில் அவர் தியானத்தை முடித்துக்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டார்.
ஜெ., சமாதிக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் சுமார் 40 நிமிடங்கள் கண்களை மூடி, மவுனமாக தியானத்தில் ஈடுபட்டார். இரவு 9.40 மணி அளவில் அவர் தியானத்தை முடித்துக்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டார்.
சுமார் 40 நிமிடங்கள் ஜெ., சமாதிக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் கண்களை மூடி, மவுனமாக தியானத்தில் ஈடுபட்டார். இரவு 9.40 மணி அளவில் அவர் தியானத்தை முடித்துக்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா பெயரை நீக்குமாறு கர்நாடகா அரசு இன்று மனுதாக்கல் செய்ய உள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு கோர்ட் அவருக்கும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.
கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்தனர். கர்நாடக சுப்ரீம் கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.