ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி.
அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா நடராஜன் நாளை காலை கட்சி தலைமை அலுவலகத்தில் பதவி ஏற்று கொள்கிறார். இந்நிலையில் ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அன்றே ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவரது மரணம் தொடர்பான முழுமையான மருத்துவ அறிக்கையையும் எந்தத்தரப்பிலிருந்தும், எவ்வித சந்தேகமும் எழாத வகையில் அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு எதற்காக 240-க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து சம்பந்தமான வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெலுங்கானா மாநிலத்தில் திராட்சை தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவை உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 14.5 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், இந்த சொத்துக்கள் அனைத்தையும், தெலுங்கானா மாநில அரசு கைப்பற்ற வேண்டும் என உத்தரவிடக்கோரி, ஐதாராபாத் ஐகோர்ட்டில் கரீப் இன்ட்டர்நேஷனல் சொசைட்டி என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
ஜெயலலிதா மரணத்தால் உயிர் இழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி என அதிமுக தலைமைக்கழகம் கூறியுள்ளது.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்டு பலர் துக்கம் தாளாமல் 597 பேர் உயிர் விட்டனர் என்றும், அவர்கள் குடும்பத்திற்கு தல ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என அதிமுக தலைமைக்கழகம் கூறியுள்ளது.
அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
பின்னர் எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தினமும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் கதறி அழும் காட்சியையும் பார்க்க முடிகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அதிமுக. தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுச் செய்தியை கேட்ட அதிர்ச்சியில் இதுவரை தமிழகம் முழுவதும் 470 பேர் உயிரிழந்துள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா டிசெம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணி அளவில் திடீர் மாரடைப்பால் காலமானார். இச்செய்தி கேட்ட பலர் கதறி அழுததோடு அதிர்ச்சி தாங்காமல் உயிரிழப்பதும் தொடர்கதையாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5-ம் தேதி காலமானார். அதேபோல 7-ம் தேதி மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அவர்கள் அதிகாலை சென்னையில் காலமானார். இருவருக்குமே அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் வருகிற 12 ந்தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிறது. தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள்.
அதிமுக ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்ற போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11-30 மணி அளவில் மரணமடைந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த தலைமை யார் வாசிப்பார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுப்ப படுகின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி, ஒரு சாதாரண குடிமகளாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் ஒரு இல்லத்தரசி, தாய் மற்றும் வேலை பார்க்கும் பெண். முன்னாள் முதல்வர் செல்வி டாக்டர் ஜெயலலிதாவின் அதிர்ச்சி மரணத்தை நினைத்து கவலைப்படும் கோடானு கோடி நபர்களில் நானும் ஒருத்தி.
சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக மக்களுக்கு பாராட்டுக்கள் என கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.
கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக டிஜிபிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவு மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெயலலிதாவிற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்தது. தமிழக அரசு மிகவேகமாக செயல்பட்டதற்கு பெருமையடைகிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.