அனைவரும் சமம் அது தான் உண்மையான சுதந்திரம்- ஜெயலலிதா

Last Updated : Aug 15, 2016, 01:13 PM IST
அனைவரும் சமம் அது தான் உண்மையான சுதந்திரம்- ஜெயலலிதா title=

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டதில் தமிழகத்திற்கு முக்கிய பங்குண்டு என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தலைமை செயலக கோட்டை முகப்பில் நடந்த 70-வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதற்கு முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிறகு சுதந்திர தின உரையாற்றிய ஜெயலலிதா, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவது பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி. 

இந்திய சுதந்திர தின போராட்டத்திற்கு வித்திட்டத்தில் தமிழகத்திற்கு முக்கிய பங்குண்டு. விடுதலை வேட்கையை தட்டி எழுப்பியவர் வாஞ்சிநாதன். டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முன்பே இங்கு தேசியக்கொடியை ஏற்றியவர் வாஞ்சிநாதன். உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரத்தில் தான் உள்ளது. அனைவரும் சமம் என்பதில் தான் உண்மையான சுதந்திரம் உள்ளது. சிறந்த கல்வி, சிறப்பான பொருளாதாரமே தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியம். 

மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கர்ப்பிணிகளுக்காக தமிழத்தில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் வளம்பெறவும், விவசாய உற்பத்திக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. மின்சாரம், உள்கட்டமைப்பு வசதியால் தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. 

தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகள் குடும்பத்திற்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும் எனக்கூறினார்.

Trending News