கச்சத்தீவு குறித்து பேச திமுக-வுக்கு அருகதை கிடையாது என முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசியுள்ளார்.
சட்டசபையில் கவர்னர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. அப்போது திமுக உறுப்பினர் பொன்முடிக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்:
கடந்த மே 23-ம் தேதி ஜெயலலிதா 6-வது முறையாகவும் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் குறைப்பது மற்றும் 500 மதுக்கடைகளை மூடுவது என்பதாகும்.
இதைத்தொடர்ந்து, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் மூடப்பட வேண்டிய 500 மதுக்கடைகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். இதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 18-ம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். இதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை தொடர்பாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அம்மா திட்டங்களின் பட்டியல் மட்டுமே கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளது. கவர்னர் உரை என்பது தமிழக அரசின் உரையாகவே உள்ளது. சுருக்கமாக சொன்னால் அம்மா கால அட்டவணை (அம்மா காலண்டர்) தான் கவர்னர் உரை.
இன்று தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை தொடங்குகிறது. பேரவையில் காலை 11 மணிக்கு ஆளுநர் கே.ரோசய்யா ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். இதில் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூட உள்ளது. கவர்னர் ரோசைய்யாவின் உரையாற்றலுடன் இக்கூட்டம் துவங்க உள்ளது. முதல்வர் ஜெயலலிதா அரசின் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூட உள்ளது. கவர்னர் ரோசைய்யாவின் உரையாற்றலுடன் இக்கூட்டம் துவங்க உள்ளது. முதல்வர் ஜெயலலிதா அரசின் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள சட்டசபையின் முதல் கூட்டம் மே 25-ம் தேதி கூடியது. அன்று முதல்வராக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா பதவியேற்றார் மற்றும் புதிய உறுப்பினர்களின் பதவியேற்றனர்.
தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜெயலலிதா இன்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார். தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வர் ஜெயலிதா மதியம் டெல்லி போய் சேர்ந்தார்.
தில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கச் சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதலமைச்சராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசுகிறார்.
அந்த வகையில் போயஸ் கார்டனில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர்களும் இருந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கோவையைச் சேர்ந்த வாலிபர் குண்டு பல்புக்குள் வரைந்துள்ளார். இது தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா அவர்கள் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இதற்க்கு நன்றி தெற்விக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த `யூ.எம்.டிராஜா` என்பவர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மின்விளக்கிற்குள் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியதற்கு "நன்றி அம்மா" என்றும் அவர் எழுதியுள்ளார்.
மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்தது அதனையடுத்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். கடந்த 30-ம் தேதி மீன் பிடிக்கச்சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும், இதேபோல் கடந்த 2-ம் தேதி மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதன்பிறகு 4-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரும், 9-ம் தேதி 6 பேரும் என இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
2016 சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடும்பின்னடைவை சந்தித்தது. இதற்கான காரணத்தை விசாரிக்க தொடங்கியது அ.தி.மு.க தலைமை. தற்போது இந்த இரண்டு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என ஆர்.கே.நகர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பட்டார். தொடர்ச்சியாக 2-வது முறை ஆட்சியையும் பிடித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்நிலையில் நேற்று ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரச்சார வாகனம் மூலம் போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக ரூ. 54.65 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ''தமிழகத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வில் வளம் பெரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
*கடந்த நான்காண்டுகளாக டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்காக வழங்கிய 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் இந்த ஆண்டும் வழங்கப்படும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி. சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதிவாதம் நடைபெருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் பல பகுதிகளில் பல மணி நேர மின்வெட்டு ஏற்படுவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
இதனால் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிகழ்வதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் தற்போது உள்ள மின்சார உற்பத்தி, மின் தேவை, மின்விநியோகம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.