வளரும் மாநிலங்களுக்கு அணு உலை அவசியம் -ஜெயலலிதா

Last Updated : Aug 10, 2016, 06:17 PM IST
வளரும் மாநிலங்களுக்கு அணு உலை அவசியம் -ஜெயலலிதா  title=

இந்திய பிரதமர் மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் புதின், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் முண்ணனியில் கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர், ரஷ்யாவுடன் இணைந்து மேலும் பல அணு உலைகளை கூடங்குளத்தில் தொடர்ந்து செயல்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் நிறுவப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலையின் கட்டுமான பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதே ஆண்டு ஜூலை 13-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கி, படிப்படியாக முழு கொள்ளளவான ஆயிரம் மெகாவாட்டை எட்டியது.

அக்டோபர் 22-ம் தேதி முதல் இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தென்னக மின்தொகுப்போடு இணைக்கப்பட்டது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் வணிக ரீதியில் மின்உற்பத்தி தொடங்கியது. இருப்பினும் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் 24 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டது.

அதற்கு பிறகு தமிழகத்துக்கு 563 மெகாவாட், கர்நாடகத்திற்கு 221 மெகாவாட், கேரளாவிற்கு 133 மெகாவாட், புதுச்சேரிக்கு 33.5 மெகாவாட் மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. முதல் அணு உலையில் மின்உற்பத்தி சீராக நடந்து வந்த நிலையில் 2-வது அணு உலையிலும் கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, அணுப்பிளவு சோதனை முடிந்து மின் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் முதலாவது அணு உலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் டெல்லி, சென்னை, கூடங்குளம் அணுமின் நிலைய வளாகம் ஆகிய 4 இடங்களில் இன்று நடைபெற்றது.

 

 

இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து அதிபர் விளாடிமர் புதின், புதுடெல்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:- "தமிழகம் போன்று வேகமாக வளரும் மாநிலங்களுக்கு அணு உலைகள் அவசியம்.உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக கூடங்குளம் அணு உலை இருக்கின்றன. இந்திய-ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு கூடங்குளம் அணு உலை ஒரு நினைவுச்சின்னம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்துள்ள ரஷ்ய அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எனது நன்றிகள் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

 

Trending News