காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்டு உத்தரவை அடுத்து பெங்களூருவில் வன்முறை வெடித்தது. கன்னட ஆதரவு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகம் கடந்த 6-ந்தேதி இரவு முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது.
இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 20-ம் தேதி வரை தினமும் 12,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது கர்நாடாகாவில் நடைபெற்றும் வரும் வன்முறை மற்றும் போராட்டங்கள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கை யாரும் கையில் எடுக்க கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். மைசூரில் தமிழகத்தை சேர்ந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
#WATCH Cauvery issue: Pro-Kannada activists vandalise shops at bus stand in Bengaluru from where buses leave for TN. pic.twitter.com/FVsyASB6VO
— ANI (@ANI_news) September 12, 2016
இரு மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பதட்டம் நிலவுகிறது. பெங்களூரில் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல்கள் மீதும், பூர்விகா செல்போன் ஷோரூம் மீதும் கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தமிழகத்தில் ஒருவரை கொன்றால், இங்கு 10 பேரை கொல்ல வேண்டும் என்று சிலர், கோஷமிட்டனர்.
WATCH: Pro-Kannada activists set a vehicle on fire in Bengaluru during Protest over Cauvery water issue pic.twitter.com/FSMmpQ0FzT
— ANI (@ANI_news) September 12, 2016
இதனிடையே முதல்வர் சித்தராமையா கூறுகையில், "சமூக வலைதளங்களில் காவிரி குறித்து அவதூறு பரப்பி வன்முறையை தூண்ட வேண்டாம். தமிழர்கள் மீது தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நாளை அமைச்சரவை கூட்டம் கூடி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அப்போது சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கப்பட உள்ளது" என்றார்.
For both states to live in peace such incidents should not occur: K'taka CM on violent protests on Cauvery issue pic.twitter.com/sxFkxkssLD
— ANI (@ANI_news) September 12, 2016
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கன்னட மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாக அதிமுக CR சரஸ்வதி கூறியுள்ளார்.
All Kannada people in Tamil Nadu are living safely; there's no issue at all: CR Saraswathi, AIADMK #CauveryIssue pic.twitter.com/CejM3ltKIa
— ANI (@ANI_news) September 12, 2016