இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையை கருத்தில் கொண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது!
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்குப் பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்ததை இந்தியா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாயுள்ளது!
பாகிஸ்தானின் லாகூர் நகரில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் பேரணி நடைபெறும் பாதையில் நேற்றிரவு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் சுமார் 45 பேர் காயமடைந்தனர் மேலும் ஒருவர் மரணமடைந்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், லாகூர் நகரில் நாளை நடைபெறும் பேரணியில் பங்கேற்க உள்ளார். இஸ்லாமாபாத் நகரில் இருந்து லாகூர் வழியாக இந்த பேரணி நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், போதிய பயண ஆவணங்கள் இல்லை எனக் கூறி சாலையில் நடந்து சென்ற இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் சிறையில் அடைத்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் மும்பையை சேர்ந்த செயிக் நபி அகமது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள அராபிய கடற்பகுதியில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடார் சரக்கு துறைமுகத்தை சீன அரசு நிர்வகித்து வருகிறது.
இந்த துறைமுகத்தை மையமாக வைத்து வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டம் வழியாக வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ள சீனா, இங்குள்ள கடல் பகுதியை சிறப்பு வர்த்தக மண்டலமாக அறிவித்து, பாதுகாத்து வருகிறது.
குவாடார் துறைமுகத்தை பாதுகாப்பதற்கு ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் மற்றும் கடற்படையின் தனிப்படை பிரிவு ஒன்று இயங்கி வருகிறது.
பாகிஸ்தான் டோபா டேக் சிங் பகுதியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை மதுவிருந்துடன் கொண்டாட தீர்மானித்த செய்த சிலர் நச்சு மதுபானத்தை அருந்தியதால் மரணம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்ளும் வாய்ப்பு மிகக்குறைவு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஜெட்லி கலந்து கொள்வது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும் ராஜ்நாத்திற்கு பாகிஸ்தானில் அளிக்கப்ப்டட வரவேற்பில் மத்திய அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
சார்க் நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டம் இஸ்லாமாபாத்தில் வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.