அகர்டாலா: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெறும் உதவியாளர் தான் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்!
பாகிஸ்தான் ஆட்சி இஸ்லாமாபாத் தீவிரவாதிகளால் ஆளப்படுகிறது என தெரிவித்த அவர் தீவிரவாதிகளின் ஊழியனாக இருந்து இம்ரான் கான் ஆட்சி நடத்தி வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற 73-வது ஐ.நா பொதுக்குழு கூட்ட அமர்வில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்தை ஒழிக்க, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அண்டை நாடான பாகிஸ்தான், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக சுஷ்மா சுவராஜ், குற்றஞ்சாட்டினார். பயங்கரவாத அச்சுறுத்தலும், பருவநிலை மாற்றமும், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திருபுரா மாநிலம் அகர்டாலாவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் ராணுவம், ISI மற்றும் தீவிரவாதிகளால் பாகிஸ்தான் ஆளப்படுகிறது எனவும் அங்கு இம்ரான் கான் வெறும் உதவியாளராக மட்டுமே பணியாற்றி வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வங்கதேசத்தைப் பற்றி சுவாமி பேசுகையில்... 'இந்தியா தொடர்ந்து வங்கதேசத்துக்கு ஆதரவு அளிக்கும், ஆனால் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்து கோவில்களை இடித்துத் தள்ளுதல், இந்து கோவில்களை மசூதியாக மாற்றுவதல், இந்துக்களுக்கு முஸ்லிம்களை மாற்றுவதல் போன்ற நடவடிக்கைகளை கைவிடல் வேண்டும். வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்களை வங்கதேச மக்கள் நிர்பந்திக்கும் பட்சத்தில் இந்தியாவில் வாழும் இந்துக்குள் இந்த பிரச்சனையில் தலையிட வேண்டி வரும் என எச்சரித்துள்ளார்.