பாகிஸ்தானில் நச்சு மதுபானத்துக்கு 24 பேர் பலி

பாகிஸ்தான் டோபா டேக் சிங் பகுதியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை மதுவிருந்துடன் கொண்டாட தீர்மானித்த செய்த சிலர் நச்சு மதுபானத்தை அருந்தியதால் மரணம் அடைந்தனர். 

Last Updated : Dec 27, 2016, 03:46 PM IST
பாகிஸ்தானில் நச்சு மதுபானத்துக்கு 24 பேர் பலி title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் டோபா டேக் சிங் பகுதியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை மதுவிருந்துடன் கொண்டாட தீர்மானித்த செய்த சிலர் நச்சு மதுபானத்தை அருந்தியதால் மரணம் அடைந்தனர். 

கடந்த 24-ம் தேதி இந்த சாராயத்தை வாங்கி குடித்த சிலர் திடீரென்று மயங்கி விழுந்தனர். வயிற்று வலி மற்றும் கண்பார்வை கோளாறால் பாதிக்கப்பட்ட இவர்களில் பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த  சாராயத்தை வாங்கி குடித்ததால் 24 பேர் பலியானதாகவும், அதில் 22 பேர் கிறிஸ்தவர்கள் மேலும் 2 பேர் முஸ்லிம்கள்.  

தற்போது 60-க்கு அதிகமானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Trending News