பாகிஸ்தானில் முதல்முறையாக 125 திருநங்கைகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்!
பாக்கிஸ்தான் பொதுத்தேர்தலில் 125 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்குச்சாவடி கண்காணிப்பாளராக பணியாற்றுவர் என பாக்கிஸ்தான் தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது!
வரும் ஜூலை 25-ஆம் நாள் பாக்கிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் ஆகிய கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில் வரும் தேர்தலின் போது, தேர்தல் பணிகளை மேற்பார்வையிடவும், கண்கானிப்பு பணியில் ஈடுபடுத்தவும், ஜனநாயக உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அறக்கட்டளையால் பயிற்றுவிக்கப்பட்ட 125 மூன்றாம் பாலினத்தவர் உட்படுத்தப்படவுள்ளனர்.
இந்த பணியாளர்கள் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் குவெட்டா ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவர் எனவும் பாக்கிஸ்தான் தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் சமயாத்தின் போது வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், சமுதாய ஒற்றுமையினை பாதிக்கப்படக்கூடிய நிகழ்வுகள், சட்ட மீறல் நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகள் ஏதும் நிகழாமல் பார்த்துக்கொள்ளுதல் இந்த தேர்தல் கண்கானிப்பாளர்களின் பணி ஆகும்.
பல்வேறு ஆய்வுகளின் படி, பாக்கிஸ்தான் குறைந்தது 5 லட்சம் மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். மூன்றாம் பாலினத்வர்களுக்கான 13 திருநங்கை நலன் சங்கங்கள் இந்த தேர்தல் வேலையில் ஈடுப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது!