16 வயது சிறுமி பாலியல் வழக்கில் 25 பேர் கைது

பாகிஸ்தான் இஸ்லாமாபாதை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 25 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jul 27, 2017, 05:58 PM IST
16 வயது சிறுமி பாலியல் வழக்கில் 25 பேர் கைது title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இஸ்லாமாபாதை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 25 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையிடம் உச்ச நிதிமன்றம் அறிக்கை சமர்பிக்கும்படி ஆணை பிறப்பித்தது. அதன் பேரில் "மொத்தம் 29 பேர் இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர், அவர்களில் 25 பேர் எங்கள் காவலில் உள்ளனர்" என்று முல்தான் நகர போலீஸ் அதிகாரி அஸ்ஸன் யூனஸ் வியாழக்கிழமை தொலைபேசியில் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

முன்னதாக அதே மாதத்தில், தெற்கு நகரமான முல்தானில் உள்ள ஒரு குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியதன்படி 13 வயதான சிறுவன் அண்டைவீட்டு பெண்ணான 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்திருந்தனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவருக்கு அச்சிருமியை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பஞ்சாயத்து கவுன்சில் தீர்ப்பளித்தது. ஜூலை 17 ம் தேதி அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்மணியை ஒப்படைத்த பிறகு தண்டனை வழங்கப்பட்டது.

இரண்டு குடும்பங்களும் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தனர்.

இருப்பினும், இரு தரப்பினரும் சந்தேகத்திற்கு இடமின்றி கிராமப்புற கவுன்சிலின் பங்களிப்பை வெளிப்படுத்தியதாக யுனஸ் கூறினார்.

"பழிவாங்குவதற்காக, கற்பழிப்புக்கு உத்தரவு பிறப்பித்திருந்த அனைத்து கிராம சபை மூப்பர்களும் கைது செய்யப்பட்டனர்," என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது தாய்மார்களும் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நீதிக்கட்சியை பாகிஸ்தான் கொண்டுள்ளது. உள்ளூர் மூப்பர்களின் கூட்டங்கள், ஜிரகாஸ் அல்லது பஞ்சாயத்துகள் என்று அழைக்கப்படுகின்றன, பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் சிக்கலான மற்றும் ஊழல் வாய்ந்த சட்ட முறைமைக்கு ஏற்றவாறு பார்க்கிறார்கள்.

நாட்டின் பெரும்பகுதிகளில், ஜிர்காக்கள் என அழைக்கபடும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தான் தீர்ப்பு வழங்குகிறார்கள். ஆனால், இந்த அமைப்புகள் நீதிமன்றங்களினாலோ அல்லது அங்கு உள்ள காவல் துறையால் முறையான அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News