சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்திருந்தது.
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். இந்த, நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்தும், திமுக கட்சியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
இந்த, நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்தும், அக்கட்சியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் நடத்தியவர்கள் போலீசார் தடியடி நடத்தியது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து செல்ல அவகாசம் கேட்டும், போலீசார் தடியடி நடத்தியதை கண்டிக்க கோரியும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி கவுல்
தலைமையிலான அமர்வு முன், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஆதாரங்கள் ஏதும் இன்றி விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறி தள்ளுபடி செய்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவரது மரணம் தொடர்பான முழுமையான மருத்துவ அறிக்கையையும் எந்தத்தரப்பிலிருந்தும், எவ்வித சந்தேகமும் எழாத வகையில் அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
கொலிஜியம் பரிந்துரைத்த 43 நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களுக்கு நியமனம் செய்ய முடியாது என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் வீர விளையாட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு கடந்த 2014-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் விதிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தி.மு.க., உறுப்பினர்கள் ஸ்டாலின், தியாகராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி. சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதிவாதம் நடைபெருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடரும் என்றும் வரும் 29-ந் தேதி ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ் ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.