விழுப்புரம் கள்ளச்சாராய சம்பவத்துக்கு சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின், பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சாதகமானது என்றும், விரைவில் எட்டிவிடும் தொலைவிலேயே 10.50% உள் இட ஒதுக்கீடு உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக இன்று டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். நாளை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நீட் விவகாரத்தில் ஆளுநரை விமர்சித்து முரசொலியில் வந்த கட்டுரைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் என்.ஆர்.ரவியும் இன்று முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு தவிர, மேலும் பல புகார்கள் வந்துகொண்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி மு.நாசர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை தாதா சாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.