பொதுமக்கள் நலன் கருதியும், மாநிலத்தில் நிலவும் “சுகாதார நெருக்கடி” கருதியும் மேதகு ஆளுநர் அவர்கள் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என்று தமிழக சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
கரூரில் 100-நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அரசு விழாவிற்கு அழைத்து சென்றதை கண்டித்து, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-
அரசு விழா என்ற பெயரில் மாணவர்களை வதைத்த குதிரை பேர அரசு இப்போது 100நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கரூரில் கூட்டி செல்கிறது. pic.twitter.com/6e8RBbO2W7
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தின் புதிய கவர்னராக வரும் அக்டோபர் 6-ஆம் தேதி பன்வாரிலால் புரோஹியா பதவியேற்கிறார். புதிய கவர்னருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பாணா்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக பதவி ஏற்கும் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு திமுக சார்பில் முக ஸ்டாலின் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டாவது கட்டமாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 77_வது நாளாக போராடி வருகின்றனர்.
நேற்று உச்சநீதிமன்றத்தில் காவேரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அதைக்குறித்து திமுக கழக செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதைக்குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிக சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பெட்ரோல், டீசலுக்கு வானளாவிய விலையேற்றம் செய்துவிட்டு 'பாஜக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான அரசு' என்றரீதியில் செயல்படுவது கண்டனத்திற்குரியது. pic.twitter.com/II0FnwzihO
நீட் தேர்வைனை ரத்து செய்ய கோரி வரும் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சி தலைவர்' மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணி சார்பில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
நீட் தேர்வினை எதிர்த்து அதிமுக அம்மா அணி சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் செய்வதாக இருந்தது. ஆனால் தற்போது அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆர்பாட்டம் ரத்து செயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நீட் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. (1/2)
தமிழ்நாட்டின் தலைமை சரியில்லாத காரணத்தால் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட நீதிமன்றம் உத்திரவிட வேண்டியுள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சி உருவானதும் எல்லா பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தஞ்சாவூரில் நடைபெற்ற மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி உரை ஆற்றுகையில் மைக்கும், அதனைத்தொடர்ந்து ஸ்பீக்கரும் முறையாக வேலை செய்யாமல் தகராறு செய்தன. அப்போது அவர் கூறியதாவது
நீட் தேர்வு தொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் 'நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வு' என பதிவிட்டுள்ளார்.
மாணவி அனிதா தற்கொலைக்கு பின்னர் நீட்-க்கு எதிராக பல்வேறு போராட்டங்ககள் தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வினை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் 1 முதல் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அதாவது 3 மாத சிறை தண்டனையோ அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிற்பித்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வலியுறுத்தி திமுகவினர் இன்று டெல்லியில், ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜனாதிபதியை இன்று சந்தித்துள்ளனர். ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரன் தலைமையிலான அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் அரசுக்கு தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, முதலமைச்சர் பழனிச்சானியை நீக்க வலியுறுத்தி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர்.
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க உடனே உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் இணைத்ததன் மூலம் தமிழகத்தில் பி.ஜே.பி மீன் வர்த்தகத்தில் செய்துவருகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மேலும் தமிழக பொறுப்பு ஆளுநர் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை தங்கள் தொடக்கத்தில் இருந்து வலியுறுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.
அர்ஜுனா விருது பெற்றுள்ள மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை அதிமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களான, மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள். அப்பொழுது தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பின் போது துறை முருகன் உடன் இருந்தார்.
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், வெள்ளி பதக்கம் வென்ற சாய்னா மற்றும் சிந்துவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:-
உலக பேட்மிட்டன் சேம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பரிசுகளை வென்ற பி.வி.சிந்து மற்றும் என்.சாய்னா ஆகியோருக்கு வாழ்த்துகள். உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம் என கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.