நீட்-க்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

Last Updated : Sep 9, 2017, 09:50 AM IST
நீட்-க்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்! title=

நீட் தேர்வைனை ரத்து செய்ய கோரி வரும் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சி தலைவர்' மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

 

மாணவி அனிதாவின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய-மாநில அரசுகளின் போக்குகளைக் கண்டித்தும் நீட் சட்டத்தைத் திரும்பபெற வலியுறுத்தியும் வரும் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

‘நீட்’ ரத்தாகும் அல்லது ஒராண்டுக்கு மட்டுமாவது விலக்கு கிடைக்கும் என்கிற போலியான நம்பிக்கையைத் தமிழக அரசு மாணவர்களிடையே வளர்த்து விட்டது. அதற்கு மத்திய அரசும் இணங்குவது போல நாடகமாடியது. கடைசியில் தமிழக மாணவர்களை மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்துவிட்டன. எனவே, தமிழகத்துக்குத் துரோகமிழைத்த அரசுகளைக் கண்டித்தும் நீட் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், இந்த அறப்போராட்டம் நடைபெறு இருக்கிறது.

Trending News