அதிமுக அம்மா அணி சார்பில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
நீட் தேர்வினை எதிர்த்து அதிமுக அம்மா அணி சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் செய்வதாக இருந்தது. ஆனால் தற்போது அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆர்பாட்டம் ரத்து செயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நீட் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 8, 2017
இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து கழகத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது (2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 8, 2017
முன்னதாக, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் எந்த போராட்டமும் நடைபெற அனுமதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. எனவே அதிமுக அம்மா அணி சார்பில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக டிடிவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்