மு.க.ஸ்டாலினை சந்தித்த அதிமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள்

Last Updated : Aug 29, 2017, 06:12 PM IST
மு.க.ஸ்டாலினை சந்தித்த அதிமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் title=

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை அதிமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களான, மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள். அப்பொழுது தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பின் போது துறை முருகன் உடன் இருந்தார்.

தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Trending News