நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இவருக்கு தொழில்முறை கட்டணமாக பிசிசிஐ ரூ.,2.4 கோடியை வழங்கியுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீ சாந்த்க்கு கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதித்தது பற்றி பதிலளிக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், கடந்த 2013 ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது மாட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. ராஜஸ்தான் அணியில் இருந்த போது சூதாட்டப்புகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதிப்பதாக பிசிசிஐ அறிவித்தது.
இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த டெல்லி கோர்ட் ஸ்ரீசாந்திற்கு எதிராக குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என கூறி அவரை விடுதலை செய்தது. இருந்தாலும் பிசிசிஐ ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட 'மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா' டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மேலும் ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச தொடரிலும், மூன்று டி 20 போட்டியிலும் விளையாடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பத்மபூஷன் விருதிற்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்துள்ள இவருக்கு இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 20 ஓவர், 50 ஓவர் உலககோப்பை, சாம்பியன் டிராபி என அனைத்துவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் டோனி. தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்திற்கு பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை நீக்கி கேரள ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த, 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நடந்த மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்குமாறு ஸ்ரீசாந்த் வைத்த கோரிக்கையையும் பிசிசிஐ நிராகரித்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என சற்று முன் ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்றும், இந்திய அணியின் பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
பிசிசிஐ-யின் பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி தலைமையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் என்.சீனிவாசன் கலந்துக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதாவின் சிபாரிசுகளை எப்படி அமல்படுத்த வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது. இறுதியாக, லோதா கமிட்டி அளித்த சிபாரிசுகளை அமல்படுத்த, ஒரு கமிட்டியை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
பிசிசிஐ-யின் நிர்வாகிகள் குழுவிலிருந்து விலகுவதாக ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக, நீதிபதி லோதா தலைமையில் சுப்ரீம் கோர்ட் குழு ஒன்றை அமைத்தது.
லோதா குழுவின் பரிந்துரையின் பெயரில், ஜனவரி 30-ம் தேதி பிசிசிஐ-க்கு நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட் நியமனம் செய்தது. அதன்படி, இந்திய அரசின் ஆடிட்டர் வினோத்ராய், பிசிசிஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட நான்கு நிர்வாகிகளை பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் நியமனம் செய்தது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்தியா அணி விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்பது உறுதியாகி விட்ட நிலையில், அணித்தேர்வு இன்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை அறிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.