பிசிசிஐ ஊடக உரிமையை ரூ.6138.1 கோடிக்கு வாங்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளை உலகம் முழுதும் ஒளிபரப்புவதற்கான உரிமையை ரூ.6138 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 5, 2018, 07:00 PM IST
பிசிசிஐ ஊடக உரிமையை ரூ.6138.1 கோடிக்கு வாங்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  title=

2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி என அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை இந்தியாவில் இந்திய அணி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிக்களை உலகம் முழுதும் டிவியில் ஒளிபரப்புவதற்கான உரிமம் ஏலம் கடந்த 3-ம் தேதி பிசிசிஐ தலைமையகம் அமைத்துள்ள மும்பையில் நடைபெற்றது. 

இதுவரை நடைபெற்று வந்த ஏலம் போல இல்லாமல் முதல் முறையாக வெளிப்படையாக இணையதளம் மூலம் ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் ஸ்டார் இந்தியா (Star India Private Ltd), சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் (Sony Pictures Networks), ரிலையன்ஸ் (Reliance Industries Limited) போன்ற நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் எம்ஜங்ஷன் சர்வீஸ் லிமிடெட் (MJunction Services Limited), டெலாய்ட் ஹஸ்கின்ஸ் & செல்ஸ் எல்எல்பி (Deloitte Haskins & Sells LLP),  ஃக்யரில் அமர்சந்து மங்கள்தாஸ் (Cyril Amarchand Mangaldas) போன்ற நிறுவனங்களுக்கு ஏலத்தில் பங்கேற்க பிசிசிஐ அழைப்பு விடுத்திருந்தது.

இன்று நடைபெற்ற இ-ஏலத்தில், இந்தியாவில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிக்களை உலகம் முழுதும் டிவியில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை 6138.1 கோடி ரூபாய்க்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மொத்தம் 102 போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே ஒரு போட்டிக்கு சராசரியாக 60.1 கோடி ரூபாய் ஸ்டார் இந்தியா நிறுவனம் கொடுக்கிறது.

 

 

கடந்த முறை ஏலத்துடன் ஒப்பிடும் போது 59% கூடுதலாக கொடுத்துள்ளது. அதாவது கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 3851 கோடி ரூபாய்க்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம் பெற்றது. கடந்த முறை ஏல ஒப்பந்தம் தொகையை, இந்த முறை நடந்த ஏல ஒப்பந்தம் தொகையுடன் ஒப்பிடும் போது, ரூ. 2287.1 கோடி அதிகமான தொகைக்கு கொடுத்து ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒப்பந்தத்தை கைப்பற்றி உள்ளது.

இதேபோல 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தத்தை ரூ. 16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News