இந்திய கிரிக்கெட் அணியின், ஆண்கள் அணிக்கு வழங்குவதைப் போல் பெண்கள் அணிக்கும் அதிக சம்பளம் வழங்க வேண்டும் என ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்!
முன்னதாக, கடந்த மார்ச் 6ஆம் நாள் இந்திய கிரிக்கெட் வீரகளுகான தர நிலை பட்டியலை BCCI வெளியிட்டது, இதில் ஆண்கள் அணி வீரர்கள் சம்பளத்தைவிட பெண்கள் அணி வீராங்கனைகளின் சம்பளமானது பல மடங்கு குறைவா அறிவிக்கப் பட்டிருந்தாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்
BCCI அறிவித்துள்ளதன் படி, பெண்கள் அணியை பொறுத்தமட்டில், A தர வீராங்கனைகளுக்கு 50 லட்சம் எனவும், B தர வீராங்கனைகளுக்கு 30 லட்சம் எனவும், C தர வீராங்கனைகளுக்கு 10 லட்சம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் அணிக்கு ஈடாக வெற்றிகளையும், பெருமையும் பெற்று வரும் மகளிர் அணிக்கு குறைவான சம்பளம் அளிப்பது கண்டனத்திற்குறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
BCCI announces new contract system for Indian Cricket teams#BCCI #AnnualSalary #TeamIndia pic.twitter.com/RaJiM7bng3
— முகேஷ் (@mukesh_m264) March 7, 2018
முன்னதாக, டோனியை விட இளைய வீரர்கள் அவரைவிட அதிகமான சம்பளம் வாங்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்று சர்ச்சைகள் எழுந்தது அனைவரும் அறிந்தது. டோனிக்காக குரல் கொடுத்த பலரில் சிலர் மகளிர் அணிகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BCCI-க்கான நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளதன் படி, இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கனைகளுக்கான புது சம்பள விவரம்...
இந்த சம்பள பட்டியளானது அக்டோபர் மாதம் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலத்திற்கானது எனவும், இந்த பட்டியளின்படி A+ தர வீரர்களுக்கு 7 கோடி சம்பளம் எனவும், A தர வீரர்களுக்கு 5 கோடி எனவும், B மற்றும் C தர வீரர்களுக்கான சம்பளம் ஆனது முறையே 3 மற்றும் 1 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.