Asia Cup 2018: இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு 3 வீரர்கள் வெளியேறினர்

வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாகமூன்று வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2018, 03:52 PM IST
Asia Cup 2018: இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு 3 வீரர்கள் வெளியேறினர் title=

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வு குழு (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது என பிசிசிஐ இன்று(வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியில் ஹார்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல் மற்றும் ஷர்துல் தாகூர் வீரர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் ஆசிய கோப்பை தொடரில் நடக்க உள்ள மற்ற போட்டியில் பங்கேற்ப்பார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் முதுகில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக பிசிசிஐ மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் மீதமுள்ள ஆசியா கோப்பை போட்டியில் அவர் இந்திய அணிக்கு விளையாட முடியாது.

அதேபோல பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அக்ஷர் பட்டேல் பீல்டிங் செய்யும் இடது கையில் காயம் ஏறப்பட்டதால், ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். 

Trending News