ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் ஒருவர் பலியானார் மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், டொனால்ட் டிரம்ப்பின் உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் என்று கூறியுள்ளார்கள்.
தற்போது அவர் அமெரிக்க நாட்டின் அதிபராகவவே மாறிவிட்டார். அதுமட்டுமல்லாது அவர் சிறு வயதில் இப்படி தான் இருந்தார் என்று ஒரு புகைப்படத்தையும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கலாம் என்று பாகிஸ்தானியர்கள் கவலையடைந்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி கூறியதாவது:- 2003-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி வருகிறது. பாகிஸ்தான் தனது நாட்டில் பயங்கரவா திகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வருகிறது. பயங்கரவாதிகளை அனுப்பி இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதையும் எப்போதும் ஏற்க முடியாது. நமக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் இதுவரை இந்தியா பொறுமையாக இருந்தது. தூதரக ரீதியில் சில முயற்சிகளை நாம் மேற்கொண்டோம். ஆனால் தற்போது நேரம் மாறி விட்டது.
சர்வதேச எல்லை பகுதியான மெந்தர், சம்பா ஆகிய இடங்களில் அமைத்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 8 பேர் பலியானார்கள்.
இதனையடுத்து இதற்க்கு பதிலடி கொடுக்க இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் 14 சேதமடைந்தன. இதில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் பலியானர்கள். 2 பேர் காயமடைந்துள்ளனர்.
பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள்
அண்மையில் வெளியாயின. அதில் ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட பலருடைய பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
இந்தியாவில் இருந்து தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் திரும்பப்பெற வாய்ப்பு உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு உறுதுணையா பாகிஸ்தான் செயல்படுவது உலகத்துக்கே தெரியும். மேலும் அவ்வப்போது பாகிஸ்தான்
இராணுவ படை இந்திய வீரர்கள் மேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் மாபெரும் உளவு வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரத்தில் ராஜ்யசபா உறுப்பினரின் உதவியாளருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரியான மெஹமூத் அக்தர், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ விவரங்களைத் திரட்டி தகவல் அளித்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரரை கொடூரமாக கொன்றுள்ளனர். இதற்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.
நேற்று இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர் வீரர் ஒருவரை சிறைபிடித்த தீவிரவாதிகள் அவரை கொடூரமாக கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசி சென்றுள்ளனர். தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரிகளை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியா மெகமூத் அக்தருடன் கைது செய்யப்பட்ட மவுலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கிர் ஆகிய இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர். இதையடுத்து, மெஹமூத் அக்தரை இந்தியாவில் இருக்கத் தகுதியற்ற நபர் என்று அறிவித்த மத்திய அரசு 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவர் நடத்திய திடீர் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுமார் 7 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் காயமைடந்தார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரிக்கு உள்பட்ட போபியா பகுதியில் இந்திய நிலைகளை மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜ் தாக்கரே கட்சியினருக்கு முன்னாள் நீதிபதி மார்கண்டயே கட்ஜூ எச்சரிக்கை.
பிரஸ் கவுன்சில் தலைவராக இருந்த போது மார்கண்டயே கட்ஜூ பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பசுவதை மற்றும் மாட்டுக்கறி தொடர்பான விவாதம் போதும் கட்ஜூவின் கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், யூரி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் நிகழ்ச்சி நடத்தவும், பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த படங்களை இந்தியாவில் வெளியிடவும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.