இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் தலைகளை துண்டித்து, உடல்களை சிதைத்துள்ள பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க திராணியற்ற அற்ற அரசாக பாஜக அரசு உள்ளது என கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
படை வீரர்களை பலிகொடுத்துவிட்டு பசுக்களை காப்பாற்றும் பயனற்ற ஆட்சி மத்தியில் இருப்பதாக சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக கூறியுள்ள அவர், தைகிரியம் இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு பொதுத்தேர்தல் நடத்த பாஜக தயாரா? எனவும் உத்தவ் தாக்ரே சாவல் விடுத்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் சோபியானில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் காவலில் இருந்த 5 போலீசார் துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோன்று மாநிலத்தில் வங்கிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான சிறப்பு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளன, ஆனால் உள்ளூர் கல்வீச்சாளர்கள் இந்நகர்வுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்திய ராணுவ வீரர்கள் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டதற்கு, பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதைக்குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்தூல் பசீத்தை அழைத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானற்ற செயலுக்கு இந்தியாவின் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததாகவும்,
சர்வதேச குற்றவாளியான தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பாகிஸ்தான் கராச்சி நகரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
1980களில் மும்பையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 'நிழல் உலக தாதா'. 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை பிடிக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானிடம் உதவி கேட்டும் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
பாகிஸ்தான் நாட்டில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் கைபர் மாகாணத்தின் தலைநகராக உள்ள பெஷாவரில் கோதார் என்ற இடத்திலிருந்து சாடா நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த வேன் ஒன்று குர்ரான் என்ற ஊரின் அருகே சக்தி வாய்ந்த குண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் பெஷாவர் நகர அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை சீல் வைத்துள்ள போலீசார், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி கம்பெனிகள் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தின.
பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குல்புஷன் ஜாதவ் (வயது 46) விடுவிக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’–வுக்காக உளவு பார்த்து வந்ததாக குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட குல்புஷன் ஜாதவ் மீதான வழக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷன் யாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது.
இவர் இந்திய உளவாளி எனவும், இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி என்றும் பாகிஸ்தான் கூறி குல்பூஷன்யாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா, ’ரா’ உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்நிலையில், குல்பூஷன் யாதவிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையை நிலைத்திருக்க செய்ய பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்கிறார்கள். அவ்வபோது அவர்களை இந்திய ராணுவம் வீரர்கள் வேட்டையாடுகிறது.
இன்று எல்லையில் கெரான் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தார்கள், இந்திய ராணுவம் பலமுறை அவர்களை எச்சரித்தது, பின்னர் ஏற்பட்ட சண்டையில் 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
“பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்” இந்தியாவுக்கே சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தான் பகுதியை 1947-ம் ஆண்டு சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான கேள்விக்கு சுஷ்மா பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வாட்ஸ்-அப் வலைதளம் மூலமாக பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு கொண்டு உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது.
இந்நிலையில் தீவிரவாதம் மற்றும் கல் வீசியவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் இருந்து 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சார்கோதாவின் முகமது அலி குஜ்ஜார் தர்காவில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்து உள்ளது.
தர்காவின் நிர்வாகி 20 பேர் கொன்று உள்ளார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் உயிர் தப்பிய 4 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்கா நிர்வாகி அப்துல் வாஹீத் அந்நாட்டு அரசு பணியாளர் என்பது தெரியவந்து உள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் நடத்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் மேற்கு பழங்குடி பிராந்தியத்தில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதியில் நுழைந்த தீவிரவாதி தனது உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
குஜராத்தை சேர்ந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன் பிடித்ததாக பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார்கள்.
கட்ச் மாவட்டம் ஜாகு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை, தங்கள் எல்லைக்குள் மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
பாகிஸ்தான் முல்தான் நகரத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு இதயம் உள்ளே இல்லாமல் உடலுக்கு வெளியே இருந்ததால் மருத்துவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவர்கள், குழந்தையின் இதயம் ஒழுங்காக செயல்பட்டு வருகின்றது என்று மருத்துவர்கள் கூறினார் எனினும் இதயத்தை உடல் உள்ளே வைக்க ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படும் என்றாலும் என்று கூறினார். மற்றும் எல்லாம் நன்றாக நடந்தால், குழந்தை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்றும் மருத்துவர்கள் கூறி இருந்தனர்.
ஹபீஸ் சயீத் பாகிஸ்தானுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குவார் என பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் கூறியுள்ளார்
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மீது 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் முக்கிய மூளையாக செயல்பட்டவர்.
தற்கொலை படை தாக்குதலில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
லாகூரில் உள்ள பஞ்சாப் மாகாண முன்பு மருந்து சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து தயாரிப்பாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். திடிரென போராட்டக்காரர்கள் கும்பலுக்குள் தற்கொலை படை தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளுடன் புகுந்து தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.
பார்வையற்றோருக்கான 2-வது டி-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிசுற்றை எட்டின.
இந்நிலையில் இறுதி ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.