பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
3-வது மற்றும் கடைசி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 281 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 337 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 81.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெற்றிக்கு 153 ரன்கள் தேவை என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தனது பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 67 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுமுனையில் கிரேக் பிராத்வெய்ட் நிலைத்து நின்று ஆட, அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஷேன் டவ்ரிச் ஒத்துழைப்பு கொடுக்க ஸ்கோர் உயர்ந்தது. வெளிச்சம் குறைவாக இருந்ததால் நேற்றைய ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 36 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி நாளான இன்று கைவசம் 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. பிரத்வெயிட், டெளரிச் ஆகிய இருவருமே தலா 60 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் தோற்று ஏற்கெனவே தொடரை இழந்துவிட்ட வெஸ்ட் இண்டீஸ் இதில் வென்று ஆறுதல் அடைந்துள்ளது ஆட்ட நாயகன் விருது பிரத்வெயிட் பெற்றார். யாசிர் ஷா தொடர் நாயகன் விருதை பெற்றார்.