கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கான்பூரில் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து 150 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்துக்கு நாசவேலையே காரணம் என விசாரணையில் தெரிய வந்தது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் நேற்று இரவு ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டார் அதில் இந்திய பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பினால் லாகூரில் வீட்டுக் காவலில் என்னை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களை செய்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்களை விதித்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி சிரியா அகதிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இவை அமெரிக்காவில் தீவிரவாதிகள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள அராபிய கடற்பகுதியில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடார் சரக்கு துறைமுகத்தை சீன அரசு நிர்வகித்து வருகிறது.
இந்த துறைமுகத்தை மையமாக வைத்து வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டம் வழியாக வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ள சீனா, இங்குள்ள கடல் பகுதியை சிறப்பு வர்த்தக மண்டலமாக அறிவித்து, பாதுகாத்து வருகிறது.
குவாடார் துறைமுகத்தை பாதுகாப்பதற்கு ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் மற்றும் கடற்படையின் தனிப்படை பிரிவு ஒன்று இயங்கி வருகிறது.
காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து எல்லையில் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் மேலும் நடைபெறும் என பிபின் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் வார்னர்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் இன்று சிட்னியில் துவங்கியது
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர் மற்றும் ரென்ஷா இருவரும் களமிறங்கினர். தொடக்க முதலே அடித்து ஆடினர். முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து வார்னர் அசத்தினார்.
பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை தடை செய்தவர்கள் பட்டியலில் சேர்க்க இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் டோபா டேக் சிங் பகுதியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை மதுவிருந்துடன் கொண்டாட தீர்மானித்த செய்த சிலர் நச்சு மதுபானத்தை அருந்தியதால் மரணம் அடைந்தனர்.
சிந்து நதி நீர் ஒப்பந்ததில் எந்த மாற்றமோ, திருத்தமோ அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தமானது 58 ஆண்டுகள் பழமையானது. அண்மையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்த்தில் உள்ள வேறுபாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என்று இந்தியா தெரிவித்தது.
இந்த நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறியதாவது:- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள பாகிஸ்தான் அனுமதிக்காது. எங்களின் நிலைப்பாடானது ஒப்பந்தத்தின் புனிதத்தை காப்பதுதான் என்று கூறியுள்ளது.
பாகிஸ்தான் சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்ற பாக்கிஸ்தான் சர்வதேச விமானம் அபோட்டாபாத் மாவட்டமான ஹவேலியன் என்ற இடத்தில் நொறுங்கி விழுந்தது 48 பேர் மரணமடைந்தனர்.
பாகிஸ்தானின் சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானம் PK-661 என்ற பயணிகள் விமானம் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 47 பயணிகள், 5 குழு மெம்பர்ஸ் மற்றும் ஒரு இன்ஜினியர் பயணித்து இருந்தார்.
அந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரபல பாடகர் ஜூனாய்ட் ஜாம்சத், அவரது மனைவி, சித்ரால் துணை கமிஷனர்,
ஒசாமா வராய்ச் மற்றும் மூன்று வெளிநாட்டவர்கள் இருந்தனர்.
பாகிஸ்தானில் 47 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது. சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானம் PK-661 என்ற பயணிகள் விமானம் சென்றுக் கொண்டிருந்தது. அபோதாபாத் என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தனது தொடர்பை இழந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அமிர்தசரஸில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்தாஜ் அசிஸின் இந்தப் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம் சென்றார். பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது. காஷ்மீரின் மேக்சல் செக்டார், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்பூரா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.