கரைபுரளும் காவிரி: ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 1,15,000 கன அடி உயர்வு!

கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 1,15,000 கன அடியாக அதிகரிப்பு!!

Last Updated : Jul 17, 2018, 09:05 AM IST
கரைபுரளும் காவிரி: ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 1,15,000 கன அடி உயர்வு!  title=

கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 1,15,000 கன அடியாக அதிகரிப்பு!!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவிழும் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அணைகள் அனைத்தும் நிறைந்து வருகிறது. 

இந்நிலையில், கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 96,000 கன அடியில் இருந்து 1,15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், தருமபுரி ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 9 ஆவது நாளாக தடை விதிப்பு!

 

Trending News