ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்.. 19ம் தேதி வாக்குப்பதிவு.. “மறக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்”

Election Campaign in Tamil Nadu: இன்று மாலை 6 மணிக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இனி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 17, 2024, 07:35 PM IST
ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்.. 19ம் தேதி வாக்குப்பதிவு.. “மறக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்” title=

Tamil Nadu Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் முடிந்தது. இன்று இறுதி நாள் என்பதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டார். இனி தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது. அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலோ, தொலைக்காட்சி மற்றும் ரேடியோ மூலமாக கூட தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. மீறினால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். 

மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி 

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் இன்று இறுதி நாள் என்பதால், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியும், கோவையில் அண்ணாமலையும் தங்கள் பிரசாரத்தில் நிறைவு செய்தனர். தமிழ்நாட்டை பொறுத்த வரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் எப்பொழுது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலும் நாளை மறுதினம் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க - தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு எப்பொழுது 

நாளை மறுதினம் ஏப்ரல் 19 ஆம் தேதி  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். 

மக்களவைத் தேர்தல் 2024 ஆட்டவனை

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை என ஏழு கட்டங்களாக நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மக்களவைத் தேர்தல் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 19
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 26
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு - மே 7
நான்காம் கட்ட வாக்குப்பதிவு -  மே 13, 
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு -மே 20 
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு -  மே 25 
ஏழாம் கட்ட வாக்குப்பதிவு -  ஜூன் 1 

மேலும் படிக்க - தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!

முதல் கட்ட வாக்குப்பதிவில் எத்தனை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது?

முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரபிரதேசம், கேரளா உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் 39 தொகுதிகளில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் 

இனி தேர்தல் பிரச்சாரம் கூடாது

இன்று மாலை 6 மணிக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இனி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது. அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலோ, தொலைக்காட்சி மற்றும் ரேடியோ மூலமாக கூட தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. உடனடியாக வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். அருகில் உள்ள கல்யாண மண்டபம், ஹோட்டல், லாட்ஸ் என எங்கும் தங்கி இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 

தேர்தல் விதிமுறைகளை மீறினால் சிறை

தேர்தல் ஆணையம் உத்தரவுகளை மீறி அரசியல் கட்சியினர் செயல்பட்டால்  இரண்டு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தேர்தல் கட்டுப்பாடுகள் தொடரும்.. -தலைமைத் தேர்தல் அதிகாரி 

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தாலும் ஜூன் 4 வரை கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - லோக்சபா தேர்தல் 2024: உங்கள் ஒரு ஓட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News