3 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

18 தொகுதியுடன் சேர்த்து 3 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மனு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2019, 03:15 PM IST
3 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மனு title=

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளிட்ட தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து ஒரே நாளில் தேர்தல் நடத்திட வேண்டு எனக்கூறி மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதேபோல திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள தமிழக அரசு உயர் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்திட உத்தரவிட வேண்டு எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

Trending News