Padmashri Award Winners 2025 From Tamil Nadu : பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டுக்கு மட்டும் 13 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த உயரிய விருதை பெறப்போகிறவர்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Padmashri Award Winners 2025 From Tamil Nadu : 2025ஆம் ஆண்டு, நடிகர் அஜித்திற்கான ஆண்டாக உள்ளது. தொடர்ந்து 2 படங்கள் ரிலீஸ், கார் ரேஸில் 3ஆம் இடம் என தனது ஹாபி மற்றும் தொழில் என இரண்டிலும் ஜெயித்து வருகிறார். அந்த வெற்றிகளுக்கு இன்னும் மரியாதை சேர்க்கும் வகையில், அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மட்டுமல்ல, தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார், எந்த பிரிவில் அவர்களுக்கு விருது வழங்கப்பட இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், நடிகர் அஜித் குமாருக்கு கலைத்துறையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு மட்டுமல்ல், அவரைப்போலவே தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகையும் நடனக்கலைஞருமான ஷோபனாவிற்கு, கலைத்துறையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடனப்பள்ளி வைத்திருக்கும் இவருக்கு, 2006ஆம் ஆண்டில் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, பண்பாடு, கல்வி சார்ந்து பல நிதி உதவிகளை இவர் செய்திருக்கிறார்.
அலங்காநல்லூரை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான். 45 ஆண்டுகளாக பறை இசைக்கலைஞராக இருக்கிறார். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் அஷ்வினுக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் கலைஞர் செஃப்.தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரை, தினமலர் வெளியீட்டாளர் லக்ஷ்மிபதி ராம சுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஹட்சன் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன், ஆலைய கட்டட கலைஞர் ராதாகிருஷ்ணன் தேவசானாபதி, சீனி விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியிருக்கின்றனர்.