மிக்ஜாம் புயல்: நாளை மெட்ரோ ரயில் சேவையில் பெரிய மாற்றம்! என்ன தெரியுமா?

Michaung Storm Metro Train Schedule: மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Written by - Yuvashree | Last Updated : Dec 3, 2023, 06:36 PM IST
  • தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
  • இதனால் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  • என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?
மிக்ஜாம் புயல்: நாளை மெட்ரோ ரயில் சேவையில் பெரிய மாற்றம்! என்ன தெரியுமா? title=

மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதையடுத்து மெட்ரோ ரயில் சேவையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) சனிக்கிழமை மெட்ரோ ரயில் அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, நாளை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. 

எனவே, நாளை (திங்கட்கிழமை டிச., 4ஆம் தேதி) அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5-8, 11-5,8-10 ஆகிய நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

டிக்கெட் விலை மாற்றம்..

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ.5 என்ற கட்டணப் பயணத்தில் வரும் 17.12.2023 அன்றும் பயணிக்கலாம். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) நாளை ஒரு நாள் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ இரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  வடகிழக்கு பருவமழை காரணமாக நாளை (03.12.2023) கனமழை, புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை (03.12.2023) பயணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.

மேலும் படிக்க | மிரட்டும் மிக்ஜாம்! எந்த தேவைக்கு யாரை அழைக்கலாம்? அரசின் உதவி எண்கள் இதோ!

மெட்ரோ பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த பிரத்யேக கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு ரூ.5 என்ற பயணக்கட்டணத்தில் வருகின்ற 17.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் பயணிகள் பயணிக்கலாம்.

மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  ஓரிரு இடங்களில் அதி கனமழையும், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 

அத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை,  செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | மிக்ஜாங் புயல்; சென்னை மெரீனா மூடல்.. பொதுமக்களுக்கு அனுமதியில்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News