சென்னை: கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குபதிவின் போது தமிழகத்தில் உள்ள 38 தொகுதி உட்பட மொத்தம் 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி என தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
தற்போது வரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்றும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
இதன்மூலம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
தலை வணக்கம் தமிழகமே!
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!
— M.K.Stalin (@mkstalin) May 23, 2019
இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது,
"நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!" எனக் கூறியுள்ளார்.