அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலத்தை "பிரதிபலிக்க" நேரத்தை பயன்படுத்திக்கொள்ள, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், 2019 சீசனின் எஞ்சிய காலப்பகுதியில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.

Last Updated : Nov 28, 2019, 03:38 PM IST
அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு! title=

சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலத்தை "பிரதிபலிக்க" நேரத்தை பயன்படுத்திக்கொள்ள, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், 2019 சீசனின் எஞ்சிய காலப்பகுதியில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின் போது தங்கள் அணிக்காக இறுதியாக தோன்றிய 40 வயது அதிரடி மன்னன், சமீபத்தில் நடைப்பெற்ற 2019 மென்சி சூப்பர் லீக்கில் இருந்தும் விலகியுள்ளார்.

வரவிருக்கும் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இருந்து தற்போது கிறிஸ் கெய்ல் விலகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் குறிப்பிடுகையில்., "மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் போட்டிகளில் விளையாட என்னை அழைத்தன, ஆனால் நான் விளையாடப் போவதில்லை. அவர்கள் (தேர்வாளர்கள்) நான் இளைஞர்களுடன் விளையாட வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் இந்த ஆண்டு நான் ஓய்வு எடுக்கப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தியினை ICC மேற்கொள் இட்டு காட்டியுள்ளது.

கரீபியன் நட்சத்திரம் மேலும் கூறுகையில், இப்போது தனது பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதற்கு இடைவெளியைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், அடுத்த ஆண்டு தான் என்ன செய்ய வேண்டும் என்றது குறித்து யோசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "நான் எனது பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து வாழ்க்கையில் முன்னேறச் சிந்திக்கப் போகிறேன், அதை சிறப்பாகச் திட்டமிட்டுசெயல்படுத்த போகிறேன். நான் பகுப்பாய்வு செய்யப் போகும் நிறைய விஷயங்கள் உள்ளன. நான் ஒருபோதும் கற்றலை நிறுத்த போவதில்லை. நான் எவ்வளவு நேரம் விளையாடுகிறேன் என்பது முக்கியமல்ல. எனக்கு திருப்பித் தர நிறைய விஷயங்கள் உள்ளன. 2020 என்பது ஒரு மூலையைச் சுற்றியே உள்ளது. 2020-க்கு நான் உண்மையில் என்ன விரும்புகிறேன் என்பதைப் பிரதிபலிக்க இப்போது மற்றும் அடுத்த மாதத்தைப் பயன்படுத்துவேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண் தொடரில் விளையாடிய கெய்ல், நான்கு ஒருநாள் போட்டிகளில் இருந்து 424 ரன்கள் குவித்ததால், 2019-க்கு ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். இருப்பினும், ICC ஆண்கள் உலகக் கோப்பையில் வேகத்தைத் தொடர அவர் தவறிவிட்டார் மற்றும் எட்டு இன்னிங்ஸ்களில் இருந்து வெறும் 242 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News