வார ராசிபலன்: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. புத்தாண்டின் முதல் வாரத்தில், ஜனவரி 2 முதல் எட்டாம் தேதி வரையிலான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். 2023ம் ஆண்டின் முதல் வாரத்தில், ராசிகள் சொல்லும் முன்னெச்சரிக்கை என்ன? இந்த வார ராசிபலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நவகிரகங்கள் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள்ளன. ஒரு கிரகம் புத்திசாலித்தனத்தின் காரணி என்றால், மற்றொன்று கர்மத்தை கணக்குப் பார்த்து பலன் தரும்கிரகம், ஒருவர் குருவாய் இருந்து செயல்படுத்துபவர் என்றால், மற்றொரு கிரக அதிபதி, மனோ காரகர்.
ஜாதகத்தில் புதனின் நிலை சிறப்பாக இருந்தால், அவர் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுத்து சரியான வேலைகளைச் செய்வார் என்றால், திருமணம் நடக்க குரு அருள் வேண்டும். எந்த ராசியில் எந்த கிரகம் அமர்கிறது என்பதைப் பொறுத்தும் பலன்கள் மாறும். நாளை ஜனவரி 2ம் தேதி புதன் அஸ்தமனம் ஆக உள்ள நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு ராசிகளுக்கான பலன்களை தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
மேஷம்: உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள், நம்பிக்கை குறையும் சூழ்நிலையால் கோபம் அதிகமாகும். குடும்பப் பொறுப்பு அலுப்பை ஏற்படுத்தும். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும்.
ரிஷபம்: வேலையில் உற்சாகம் இருக்கும், ஆனால் மனதில் குழப்பம் இருக்கும், தந்தைக்கு உடல்நலக் குறைபாடுகள் இருக்கலாம், அம்மாவின் ஆதரவு கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்களின் பொறுமை அதிகரிக்கும். தாயிடமிருந்து ஒத்துழைப்பும் அனுசரணையும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கலாம், நண்பரின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
மிதுனம்: இந்த வாரத் தொடக்கத்தில் பொறுமை குறையும், சுயக்கட்டுப்பாடு குலையும், நண்பரின் உதவியால் வியாபாரம் செழிக்கும், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உழைக்க சோம்பேறித்தனப்பட வேண்டாம்.
மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!
கடகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும், அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். நண்பர்களின் உதவியுடன் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். பண வரத்து அதிகரிக்குக்ம்.கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும்,
சிம்மம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிப்பதால், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலைப்பளு அதிகரிக்கும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கன்னி: தொழில் விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும், சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும், திட்டமிடாத செலவுகள் அதிகரிக்கும். பரிசுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | Mercury Transit: புதன் பெயர்ச்சி பத்ர யோகத்தால் திளைக்கும் கிரகங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ