Jio Recharge Plans Voice Only: சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை குறிவைத்து எச்சரிக்கை விடுத்திருந்தது. அதாவது, அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் உரிய விதத்தில் ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பாக 2ஜி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் வசதிகள் மட்டும் கொண்ட திட்டங்களை நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
அதாவது, தற்போது அனைத்து ரீசார்ஜ் பிளான்களிலும் டேட்டாவே பிரதானப்படுத்தப்படுகிறது. டேட்டாவுக்கு ஏற்ப விலையும் மாறுபடுகிறது. 2ஜி பயனர்களுக்கு அதிகமாக டேட்டா தேவைப்படாது. அப்படியிருக்க அவர்களால் அதிகம் தொகை கொண்ட இந்த ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்த முடியவில்லை என புகார்கள் எழுந்தன. மேலும், சில மாதங்கள் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தாலும் அந்த மொபைல் எண் செயலிழந்துவிடுகிறது. எனவே, பலரும் தங்களின் தொடர்பு எண்ணை பறிகொடுக்க நேர்கிறது. அப்படியான சூழலில், அனைத்து நிறுவனங்களும் 2ஜி பயனர்கள் டேட்டா இல்லாத வாய்ஸ்-ஒன்லி பிளான்களை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
டிராயின் அறிவிப்பை அடுத்து தற்போது ஜியோ நிறுவனம் புதிய டேட்டா இல்லாத வாய்ஸ்-இன்லி திட்டத்தை கொண்டுவந்துள்ளது. மேலும், ஏற்கெனவே இருந்த திட்டத்தின் விலையையும் குறைத்திருக்கிறது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் கூட அதன் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களின் விலையை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜியோ தற்போது அறிவித்துள்ள திட்டங்களின் விவரங்களை இங்கு காணலாம்.
ஜியோ ரூ.448 ரீசார்ஜ் பிளான்
ஜியோ நிறுவனம் 458 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டத்தின் விலையை குறைத்துள்ளது. இதில் வரம்பற்ற வாய்ஸ் காலிங் 84 வேலிடிட்டியில் கிடைக்கும். 1,000 எஸ்எம்எஸ் இத்துடன் வரும். மேலும் ஜியோ சினிமாஸ் மற்றும் ஜியோ டிவி சேவையை பயன்படுத்தலாம். அதாவது ஒரு நாளில் நீங்கள் 5 ரூபாய் செலவழித்தால் போதும்.
ஜியோ ரூ.1,748 ரீசார்ஜ் பிளான்
முதலில், வரம்பற்ற காலிங் வசதியுடன் 3600 எஸ்எம்எஸ்களை 365 நாள்களுக்கு ஜியோ வழங்கி வந்தது. இந்த திட்டத்தின் விலை ரூ.1958 ஆக இருந்தது. தற்போது டிராய் தலையீட்டாலும், வாடிக்கையாளர்களின் கோரிக்கையை அடுத்து ஜியோ 1,748 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் வேலிடிட்டி மட்டுமே குறைந்துள்ளது. அதாவது, 336 நாள்கள் மட்டுமே வேலிடிட்டி ஆகும். ஆனால், அதே வரம்பற்ற காலிங் மற்றும் 3600 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் திட்டங்கள்
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களை கொண்டுவந்துள்ளன. வோடபோன் ஐடியா 1,460 ரூபாயில், 270 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வைத்துள்ளது. இதில் வரம்பற்ற காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது, கூடுதல் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் உள்ளூர் எஸ்எம்எஸ் சேவைக்கு 1 ரூபாய் மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ் சேவைக்கு 1.50 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
ஏர்டெல் அதன் இரண்டு திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது. முன்னர் 499 ரூபாயில் 84 வேலிடிட்டி உடன் வந்த வாய்ஸ் மற்றும் எஸ்எம்ஸ் திட்டம் தற்போது 30 ரூபாய் குறைக்கப்பட்டு 469 ரூபாயாக மாறியுள்ளது. அதேபோல், 365 நாள்களுக்கான வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் திட்டம் முன்னர் 1,959 ஆக இருந்தது. தற்போது 110 ரூபாய் குறைக்கப்பட்டு 1,849 ஆக உள்ளது.
மேலும் படிக்க | இனி ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் இத்தனை நாட்கள் சிம் ஆக்டிவாக இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ