மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார், இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வாக உள்ளது. அரசு துறைகள் தொடங்கி, மாத சம்பளம் வாங்கும் மக்கள் வரை தங்களுக்குத் தேவையான சலுகைகள் கிடைக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும் வருமான வரி செலுத்துவோர் வரவிருக்கும் பட்ஜெட்டில் மாற்றங்கள் இருக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். காரணம் வருமான வரி வரம்பில் பெரிய மாற்றம் இருக்கும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. வரவிருக்கும் யூனியன் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் சலுகைகள் மற்றும் என்ன மாதிரியான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வருமான வரி விலக்கு வரம்பு
புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாறுவதற்கு வரி செலுத்துவோருக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் பழைய வரி விதிப்பில் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, புதிய வருமான வரி விதிப்பின் கீழ் வரி விலக்கு வரம்பு ரூ.3,00,000 ஆகும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை ரூ.500,000 ஆக மத்திய அரசு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களுக்கு செலவழிக்க அல்லது சேமிக்க அதிக வருமானத்தை வழங்கும். இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உயர்த்தும்.
வரி விலக்கு
தற்போது புதிய வரி விதிப்பின் கீழ், ஆண்டு வருமானம் ரூ. 700,000 வரை உள்ளவர்களுக்கு வரிவிலக்கு உள்ளது. வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் இந்த வரம்பு ரூ.10,00,000 ஆக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் நடுத்தர வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிப்பதுடன், அவர்களின் நிதி நிர்வாகத்தை எளிதாக்கும்.
நிலையான விலக்கு அதிகரிப்பு
சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு நன்மை பயக்கும் வகையில், புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரிக்கான நிலையான விலக்கு ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ரூ.75,000 நிலையான விலக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையான விலக்கு அதிகரித்தால் சாமானிய மக்களுக்கு அதிகம் உதவும்.
மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகை
கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், பசுமை ஆற்றலுக்கு மாறவும், பிரிவு 80EEP (மின்சார வாகனம் வாங்குவதற்கான கடன் வட்டி விலக்கு) இன் கீழ் உள்ள விலக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய செஸ் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு வசதித் துறை
அனைவருக்கும் சொந்த வீடு, வீட்டு உரிமை போன்றவற்றை ஊக்குவிக்கும் மத்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ப, புதிய வருமான வரி விதிப்பில் வீடு கட்டுவதற்கான வீட்டுக் கடனுக்கான வட்டியில் இருந்து விலக்கு அளித்ததை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க | Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ், பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ