Personal Loan With Aadhaar Card: ஆதார் அட்டை அடிப்படையாக வைத்து நீங்கள் ரூ.2 லட்சம் வரை கூட கடன் வாங்கலாம். இந்த தனிநபர் கடனை பெறுவது எப்படி என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Personal Loan With Aadhaar Card e-KYC Verification: தனிநபர் கடன் வழங்க தற்போது பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அந்த வகையில், ஆன்லைன் மூலமும் நீங்கள் தனிநபர் கடனை வாங்கலாம்.
தனிநபர் கடன் என்பது மற்ற கடன் வசதிகளை விட கடன் வாங்குபவர்களுக்கு சற்று சௌகரியத்தை கொடுக்கவல்லது. எனவே, திடீர் பணத்தேவைக்கும், அவசர தேவைக்கும் பலரும் தனிநபர் கடனைதான் பெறுவார்கள்.
அதாவது, உங்களுக்கு ஏற்ற வகையில் பணத்தை திருப்பி செலுத்தும் நடைமுறையை வைத்துக்கொள்ளலாம், விரைவாகவும் கடனை முடித்துவிடலாம். இதன் காரணமாகவே பலரும் தனிநபர் கடனை எடுப்பார்கள்.
தனிநபர் கடனுக்கான விண்ணப்ப செயல்முறையில் ஆதார் கார்ட் தான் உங்களின் அடையாள சான்றாக இருக்கிறது. மேலும் உங்களது முகவரிக்கு சான்றாகவும் ஆதார் அட்டை உள்ளது. நாட்டில் வங்கிக் கணக்கை தொடங்குவது, பான் கார்டை பெறுவது என அனைத்துக்கும் ஆதார் அட்டை வேண்டும்.
அந்த வகையில், தற்போது பல்வேறு நிதி நிறுவனங்கள், ஆன்லைன் நிதி நிறுவனங்கள் ஆதார் அட்டை சார்ந்த e-KYC சரிபார்ப்பின் மூலம் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றன. உங்களின் அவசர தேவை, கல்வி, தனிப்பட்ட செலவுகள் அனைத்திற்கும் கடன்களை பெறலாம். இதன்மூலம் நீங்கள் விரைவாகவும், எவ்வித அலைச்சலும் இன்றி ரூ.2 லட்சம் வரை கூட கடன் பெறலாம்.
ஆதார் அட்டை மூலம் கடன் பெறுவதற்கு எதையும் பிணையம் வைக்க தேவையில்லை. மேலும், முகவரி சான்று, அடையாள சான்று, ஆகியவற்றை சமர்பிக்க வேண்டிய தேவையே இருக்காது. எவ்வித மனித இடையூறுகளும் இன்று வேகமாக கடன் பெற இந்த வழிமுறை வழிவகுக்கும்.
இந்த கடனை வாங்க உங்களிடம் ஆதார் கார்டுடன், பான் கார்ட் அவசியம் ஆகும். மேலும், உங்களின் 3-6 மாதங்களின் வங்கிக் கணக்கின் ஸ்டேட்மண்ட்ஸ் வேண்டும். நிறுவனங்களில் வேலைப்பார்ப்பவர் என்றால், உங்கள் வருமானத்திற்கான சான்று இருந்தால் போதும். தொழில் செய்பவர் என்றால் வருமான வரி தாக்கல் செய்த ஆவணம் போதுமானது.
கடனை பெற நீங்கள் கடன் வாங்க நம்பத்தகுந்த ஆன்லைன் நிதி நிறுவனங்களின் தளங்களை கண்டறிய வேண்டும். அதன் செயலியை மொபைலில் தரவிறக்கம் செய்து கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடன் பெற தகுதியான அளவுகோல்களைச் சரிபார்க்கவும். உங்கள் தகுதியை உறுதிப்படுத்த கடன் வழங்குபவரின் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும். சரிபார்ப்புக்காக தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
உங்கள் மொபைலுக்கு OTP வரும். எனவே, உங்கள் மொபைல் நம்பருடன் உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்கிறதா என்பது உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். விண்ணப்பத்தை சமர்ப்பித்து, கடன் வழங்குபவர் உங்கள் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து அங்கீகரிப்பார்கள். அங்கீகரிக்கும் வகையில் காத்திருக்கவும். ஒப்புதல் அளிக்கப்பட்ட உடன், கடன் தொகை உங்கள் கணக்கில் 24 மணிநேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் வந்துவிடும்.