Weight Loss Tips: இன்றைய அவசர கதியிலான வாழ்வில் மக்கள் பல வித நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை வாழ்க்கை முறை நோய்கள். ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால் ஆகியவை இவற்றில் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றது.
உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பு (Belly Fat) ஒரு பெரிய அசௌகரியமாக உள்ளது. தொப்பை மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பு மிக வேகமாக சேர்ந்துவிடுகிறது. ஆனால், அதை அகற்றுவது ஒரு பெரும் சவாலாக உள்ளது. தொப்பை கொழுப்பும் உடல் பருமனும் நமது தன்னம்பிக்கையை குலைப்பதோடு, பல வித நோய்களுக்கும் வழி வகுக்கின்றன. ஆகையால் இவற்றில் அதிகப்படியான கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும்.
உடல் பருமனை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். எனினும், இவற்றால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முடிந்த வரை இயற்கையான வழிகளில் தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் குறைக்க முயற்சிபது நல்லது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தண்ணீர்: தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. ஒரு நபர் தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம். இதனால் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பும் வேகமாக குறையத் தொடங்கும். தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் வெதுவெதுப்பான நீரை குடிப்பது இன்னும் நல்லது. ஏனெனில் வெதுவெதுப்பான நீர் வயிற்று கொழுப்பைக் கரைக்கும்.
உடற்பயிற்சி: தொப்பையைக் குறைக்க, நாம் தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் யோகா, நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏதாவது ஒரு வகையான உடற்பயிற்சியை செய்வது நல்லது. இவை அனைத்தும் வேகமாக கலோரிகளை எரிக்க உதவுகின்றன.
பழங்கள், காய்கறிகள்: தொப்பையைக் குறைக்க முயற்சிக்கும் நபர்கள் தங்கள் உணவில் அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும். இந்த வகை உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். கொழுப்பை அதிகரிக்கும் கூறுகள் இவற்றில் இருக்காது. இதன் காரணமாக உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பு வேகமாக உருகும்.
உணவு: காலை, மாலை, இரவு என அனைத்து வேளைகளிலும் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். இரண்டாவது முறையாக சாப்பிடும் போதெல்லாம், முதல் உணவுக்கும் இரண்டாவது உணவுக்கும் இடையில் 3 முதல் 4 மணி நேரம் இடைவெளி விடுவது நல்லது. இப்படிச் செய்வதன் மூலம் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். உணவுக்கு இடையிலான இடைவெளி காரணமாக கொழுப்பு உருகும். உணவுக்கு இடையில் இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், தொப்பை கொழுப்பு அதிகரிக்கக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலை இயற்கையாக டீடாக்ஸ் செய்ய உதவும் சில உணவுகளும்... பழக்கங்களும்
மேலும் படிக்க | மது, புகை பழக்கம் இருக்கா? கல்லீரல் பாதிக்கலாம்! தினமும் இந்த ஜூஸ் குடிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ