தமிழக செஸ் வீராங்கனைக்கு கை கொடுக்க மறுப்பு.. உஸ்பெகிஸ்தான் வீரரால் வெடித்த சர்ச்சை!

இந்திய செஸ் வீராங்கனை வைஷாலியுடன் கை கொடுக்க உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் யாகுபோவ் மறுத்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jan 27, 2025, 05:12 PM IST
  • நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெறுகிறது
  • இந்திய வீராங்கனையுடன் கை குலுக்க உஸ்பெக்ஸ்தான் மறுத்துள்ளார்
  • இது தொடர்பாக உஸ்பெக் வீரர் விளக்கம் அளித்துள்ளார்
தமிழக செஸ் வீராங்கனைக்கு கை கொடுக்க மறுப்பு.. உஸ்பெகிஸ்தான் வீரரால் வெடித்த சர்ச்சை! title=

நெதர்லாந்தில் டாடா ஸ்டீஸ் செஸ் தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர். 

இந்த நிலையில், நான்காவது சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை வைஷாலியை எதிர்த்து உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் விளையாடினார். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய வீராங்கனை வைஷாலி நோடிர்பெக் யாகுபோவுக்கு கை கொடுக்க முன் வந்தார். ஆனால் நோடிர்பெக் அதனை மறுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவி தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிங்க: காயத்தில் இருந்து இன்னும் மீளாத பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா? வெளியான தகவல்!

இது தொடர்பாக உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பென் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தெரிவித்ததோடு மன்னிப்பும் கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்; அன்பான செஸ் நண்பர்களே, வைஷாலியுடனான போட்டியின் சூழ்நிலையை விளக்க விரும்புகிறேன். 

மகளிர் மற்றும் இந்திய செஸ் வீரர்கள் மீதான மரியாதையுடன், மத ரீதியிலான காரணங்களுக்காக பெண்களை தொட மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2023ஆம் ஆண்டில் திவ்யாவுடனான போட்டியில் இதுபோன்ற சூழ்நிலைகளில் அவ்வாறு செய்வது தவறு என்றூ நான் நினைக்கிறேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதையே செய்வேன். 

நான் எதிர் பாலினத்தினருடன் கை குலுக்க் கூடாது என்றோ, பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ மற்றவர்களிடன் கூற மாட்டேன். என்ன செய்ய வேண்டும் என்றாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இன்று பல்மகாவிடம் இது பற்றி கூறினேன். அவர் ஏற்றுக்கொண்டார். அரங்குற்கு வந்ததும் நான் அப்படி செய்யக் கூடாது என்றும் குறைந்தபட்ச வணக்கம் கூற வேண்டும் என கூறினர். போட்டி தொடங்குவதற்கு முன் திவ்யா மற்றும் வைஷாலியிடம் அதை கூற முடியவில்லை. அது சங்கடமான சூழ்நிலைகளுக்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: "என் கல்யாணமே நின்றுவிட்டது".. கதறும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News