ரோகித் ஷர்மாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், வைரலாகும் Video!

ரோகித் ஷர்மாவிற்கு ரசிகர் ஒருவர் முத்தம் அளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2018, 05:59 PM IST
ரோகித் ஷர்மாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், வைரலாகும் Video!  title=

ரோகித் ஷர்மாவிற்கு ரசிகர் ஒருவர் முத்தம் அளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமான தொடராக கருதப்படும் Vijay Hazare Trophy கடந்த செப்டம்பர் 19-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ள இந்த தொடரின் காலிறுதிப்போட்டிகள் நேற்று துவங்கியது.

இத்தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும் பிஹார் அணியும் நேற்று பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் பிஹார் அணியினை மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது. எனினும் இந்த வெற்றியை காட்டிலும் அனைவராலும் பேசப்பட்ட விஷயம், ரோகித் ஷர்மாவுக்கு ரசிகர் ஒருவர் முத்தம் அளித்த விவகாரம் தான்... ஆடுகளத்தில் நுழைந்த ரசிகர் ஒருவர் ரோகித் ஷர்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பின்னர் அவருக்கு முத்தம் அளிக்க முற்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனைத்து ஊடகங்களுக்கும் தலைப்பு செய்தியாய் உறுமாறியுள்ளது.

முன்னதாக இப்போட்டில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்து விளையாடியது. இதன்படி முதலில் களம் கண்ட பிஹார் அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப 28.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 33*(43), அகில் 24(29) ரன்கள் குவித்து அணியின் வெற்றியினை உறுதி செய்தனர். இதனால் மும்பை அணி ஆட்டத்தின் 12.3-வது ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் வெற்றி இலக்கினை எட்டியது.

Trending News