ரயில் பயணத்தின் போது படியில் நின்று பயணம் செய்ய வேண்டாம் என இந்தியன் ரயில்வே அமைச்சகம் வீடியோ ஒன்றின் மூலம் எச்சரித்துள்ளது!
இன்று காலை இரயில்வே அமைச்சகம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "ரயிலில் பயணிக்கும் போது படியில் நின்று பயணிக்க வேண்டாம். இது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது. டிசம்பர் 26 அன்று மும்பையில், தில்ஷன் என்ற இளைஞன் படியில் நின்று பயணித்ததால் தனது உயிரினை இழந்தார். எனவே ஓடும் ரயிலில் படியில் நின்று பயணிக்க வேண்டாம், அதேப்போல் நகரும் ரயிலில் ஏறுவது விபத்துக்களை உண்டாக்கலாம் என்பதை பயணிகள் உணர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.
இந்த பதிவில் இந்தியன் ரயில்வே அமைச்சகம் இணைத்துள்ள வீடியோவில் இளைஞர் ஒருவர் படியில் நின்றபடி பயணிக்கின்றார். பின்னர் எதிர்பாரவிதமாக வழியில் இருக்கும் கம்பத்தில் அடிப்பட்டு இறக்கின்றார். இந்த வீடியோ ஆனது பார்ப்பர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.
ट्रेन में स्टंट ना करें ये गैरकानूनी है एवं जानलेवा भी सिद्ध हो सकता है।
मुंबई में 26 दिसंबर को दिलशान नाम का युवक ट्रेन के बाहर लटक कर स्टंट करते हुए अपनी जान गंवा चुका है।
अपनी सुरक्षा की अवहेलना करके ट्रेन के बाहर लटकना,चलती ट्रेन में चढ़ना, हादसे का बुलावा हो सकता है। pic.twitter.com/oGEsqjoka6
— Ministry of Railways (@RailMinIndia) December 30, 2019
முன்னதாக இந்தாண்டில் ரயில் விபத்துகளில் பயணிகள் இறப்பு ஏதும் இல்லை என இந்தியன் இரயில்வே தெரிவித்திருந்தது. எனினும் இதுப்போன்ற இறப்புகள் பயணிகளின் அலட்சியத்தால் இன்றும் நிகழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றது.
இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்., 2018-19 ஆம் ஆண்டில், ரயில்வே 16 இறப்புகளையும், 2017-2018-ஆம் ஆண்டில் 28 இறப்புகளையும், 2016-2017-ஆம் ஆண்டில் 195 இறப்புகளையும் பதிவு செய்தது.
1990-1995-க்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. அந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 2,400 இறப்புகள் மற்றும் 4,300 பேர் காயமடைந்தனர் என கூறப்படுகிறது. இதனையடுத்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தின் பின்னர் 2013-2018-க்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 110 விபத்துக்கள் நிகழ்ந்தன என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த தரவுகளின் படி சுமார் 990 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 1,500 பேர் காயமடைந்தனர் எனவும் கூறப்படுகிறது.
ரயில்வே ரயில் விபத்துக்கள் (மோதல், தடம் புரண்டல், தீ, லெவல் கிராசிங் விபத்துக்கள் மற்றும் பிற விபத்துக்கள் அடங்கும்) காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்கள், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த விபத்து ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பிறரின் மரணம் என மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.